For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் இவ்வளவு காலம் இந்தியாவில் தனித்து இருக்க காரணம்.. மன்னர் போட்ட அந்த ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல்தான் செயல்படப்போகிறது. ஏன் இவ்வளவு காலம் மற்ற மாநிலங்களைப் போல் இல்லாத ஒரு நிலை ஜம்மு காஷ்மீரில் இருந்தது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

    இனி ஜம்மு காஷ்மீரில் மற்ற மாநிலங்களைப் போல் தான் சட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வளவு காலம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தாலும் அதற்கு அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு சுயாட்சி வழங்கி வந்தது.

    why jammu kashmir get special status in india last 70 years

    1948களில் காஷ்மீர் மன்னர் ஹரி சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவுடன் இணைவதாக கையெழுத்திட்டார். அதனால் அவர் போட்ட ஒப்பந்தப்படி அப்போது காஷ்மீருக்கு என்று தனி சுயாட்சி அந்தஸ்து வழங்கவும் அங்குள்ள மக்களுக்கு அவர்களே சட்டம் இயற்றிக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சாசன அமர்வில் 370வது பிரிவு சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.

    இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அந்த மாநில சட்டசபையில் இயற்றப்படும் சட்டங்களே செல்லும் என்ற நிலை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 71 வருடங்களாக நீடித்த ஜம்மு காஷ்மீருக்கான தன்னாட்சிக்கு அந்தஸ்து முடிவுக்கு வந்துள்ளது.

    English summary
    why jammu kashmir get special status in india last 70 years, india important agreement with kashmir king
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X