கண்ணாமூச்சி ஆடும் அதிமுக எம்எல்ஏக்கள்.... தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கண்ணாமூச்சி ஆடும் அதிமுக எம்எல்ஏக்கள்..தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது ஏன்?-வீடியோ

குடகு: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர்.

புதுச்சேரியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காக கர்நாடகா மாநிலத்திற்கு சென்றனர். குடகில் உள்ள ஆரஞ்ச் கவுன்டியில் தங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கேயும் இல்லை என்று கூறப்படுகிறது.

எம்எல்ஏக்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர்.

ஜாலி வாக் இல்லை

ஜாலி வாக் இல்லை

புதுச்சேரியில் ஜாலியாக வாக்கிங் போய் கொண்டே பேட்டி கொடுத்தவர்கள், இப்போது ஊடகங்களை தவிர்க்க காரணம் டிடிவி தினகரன்தானாம். எங்கேயிருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மறைந்து கொண்டுள்ளனர்.

பேடிங்டன் ரிசார்ட்

பேடிங்டன் ரிசார்ட்

ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் ஊடகத்தின் லைனின் சிக்கினார். அப்போது அவர் எங்கேயிருக்கிறோம் என்றே தெரியவில்லை என்றும் கூறினார். அவர்கள் இருக்குமிடம் மைசூரில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனராம்.

வாடகை எவ்வளவு

வாடகை எவ்வளவு

மலைகளால் சூழப்பட்ட இந்த ரிசார்ட்டில் ஒருநாள் வாடகை வரி இல்லாமல் 13500 ரூபாய். வரியோடு சேர்த்தால் 17 ஆயிரம் ரூபாய் வரும். இதில்தான் 19 பேருக்கும் தனித்தனி காட்டேஜ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.

பேட்டி கிடையாது

பேட்டி கிடையாது

புதுச்சேரியில் தங்கியிருந்தவரை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்த எம்எல்ஏக்கள், இப்போது யார் கண்ணிலும் சிக்காமல் மறைந்து உள்ளனர். யாருடைய போனையும் எடுக்காதீங்க என்பதுதான் அவர்களுக்கு போடப்பட்டுள்ள கட்டளையாம். மீடியாவிற்கு எந்த பேட்டியும் தராதீங்க என்றும் கூறியிருக்கிறார்களாம். எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி என்றுதான் தெரியவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pro Dinakaran MLAs are enacting hide and seek game for the last few days in Tamil Nadu.TTV dinakaran supporting MLAs in its hold have been shifted to Paddington Resort, in coorg district.
Please Wait while comments are loading...