சட்டமன்றத்தில் நாளையே பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil
  பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ

  பெங்களூரு : கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மாலை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தான் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

  கர்நாடக சட்டபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38 ஆகிய இடங்களைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், அங்கு குழப்பம் ஏற்பட்டது.

  Yeddyurappa confident that he will win on Floor Test

  இதனையடுத்து தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கட்சி கூட்டாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

  இதில் எடியூரப்பா நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் மற்றும்
  எஸ்.ஏ.போப்தே அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

  இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசுகையில், தலைமைச் செயலாளருடன் பேசி சட்டமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நாளை நிச்சயம் 100% பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yeddyurappa confident that he will win on Floor Test. SC orders to conduct floor test on Karnataka Assembly to prove the Majority and it will happen by tomorrow Evening 4 PM.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more