For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதநேயமற்ற வங்கதேசம்.. மனித வாடையே அறியாத தீவில் குடியேற்றப்படும் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்கடத்தல், விபச்சாரத்தில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்!- வீடியோ

    டாக்கா: மனித வாடையே அறியாத தீவுப்பகுதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் குடியேற்றப்படவுள்ளனர்.

    மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள், வங்கதேச கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர்.

    வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப் பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.

    அகதிகளுக்காக கட்டடங்கள்

    அகதிகளுக்காக கட்டடங்கள்

    தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் 3 அன்று திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அடுத்த மாதம் முதல்

    அடுத்த மாதம் முதல்

    அதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் இங்கு குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது. "முதல்கட்டமாக, அடுத்த மாதம் 50 முதல் 60 ரோஹிங்கியா குடும்பங்கள் இங்கு குடியேற்றப்படுவார்கள்" எனக் கூறியிருக்கிறார் பேரிடர் மேலாண்மை அதிகாரியான ஹபிபுல் கபிர் சவுத்ரி.

    பரிதாபத்துக்குரிய பகுதி

    பரிதாபத்துக்குரிய பகுதி

    கடல் மட்ட அதிகரிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் வங்கதேசம், கடுமையான புயல்களையும் மோசமான வானிலைகளையும் எதிர்கொள்கின்றது. கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாஷன் சர் தீவை சுற்றியுள்ள கடலோர பகுதியிலேயே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

    வங்கதேசத்தில் தஞ்சம்

    வங்கதேசத்தில் தஞ்சம்

    கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், இப்படியொரு திட்டத்தை வங்கதேசம் முன்வைத்த போது மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பினை பதிவுச்செய்திருந்தன. அதையும் மீறி, இத்தீவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த தீவாக மாற்ற தீவிரம் காட்டிய வங்கதேசம், அதற்காக 280 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தது.

    English summary
    1 lakh Rohingya refugees will be given shelter in Bhashan Char island, a pathetic place in the Bangladesh sea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X