For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளம் புகுந்த ஆலையிலிருந்து ரசாயன கசிவு.. சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ரசாயன ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹார்வி புயலால் பெரும் மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தை சந்தித்தது டெக்சாஸ் மாகாணம். இதனால் அங்குள்ள அக்கெமா என்ற ரசாயன ஆலைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ரசாயன கசிவு ஏற்படும் என அஞ்சிய அரசு நிர்வாகம், அந்த ஆலையை சுற்றிலும் 3 கி.மீ தூரத்திற்கு வசித்த மக்களை அப்புறப்படுத்தியது.

2 explosions reported at chemical plant in Harvey-Hit Texas

இந்த நிலையில், இன்று திடீரென ஆலைக்குள் குண்டு வெடிப்பதை போல 2 முறை சத்தம் வந்துள்ளது. பின்னர் கரும்புகை அங்கிருந்து வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில், பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்களை ககொண்ட ஆலை என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக தீயணைப்பு வீரர்கள் இப்பிரச்சினையை கையாண்டு வருகிறார்கள்.

English summary
Local emergency officials on Thursday reported two explosions at a flooded chemical plant in the Texas town of Crosby, its operators Arkema Inc said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X