மனிதன் பாதி.. மிருகம் பாதி! சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனம்.. விஞ்ஞானிகள் ஷாக்
பெய்ஜிங்: கடந்த 2006ம் ஆண்டு சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை கண்டுபிடித்தனர். இதன் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், புதிய மனித இனம் இருந்ததற்கான ஆதாரமாக தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக குரங்கிலிருந்து மனிதர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மனிதர்களாக நாம் ஒருவர் மட்டும் பரிணாமம் அடையவில்லை. நம்முடன் வேறு சில இனங்களும் உருவானது. அவையெல்லாம் காலப்போக்கில் அழிந்து நாம் மட்டும் மனிதனாக தனித்து இருக்கிறோம். இதை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.

ஆனால் இப்படி பட்டியலிடப்பட்ட இனங்களை தவிர புதிய இனம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது கூறியிருக்கின்றனர். 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் 16 மனிதர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் கிடைத்தன. இத்தனை நாட்கள் வரை இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இப்போது அந்த மண்டை ஓடுகளின் பற்களை ஆய்வு செய்திருக்கின்றனர்.
மொத்தம் 21 மனித பற்களை கண்டுபிடித்தனர். இதன் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் 'மனிதப் பரிணாம வளர்ச்சி இதழில்' வெளியாகியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
புதிய இனம்
"இந்த பற்களுக்கு சொந்தமான மனித இனம் 'மத்திய பிளீஸ்டோசீன்' காலத்தில் வாழ்ந்தவை. இன்றைய தேதியில் இருந்து சுமார் 781,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து 126,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த புவியியல் காலத்தைதான் 'மத்திய பிளீஸ்டோசீன்' காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலத்தில்தான் ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்கள் மறைந்து, நவீன மனிதனின் மூதாதையர்களான ஹோமோ ஹெய்டெல்பெர்கென்சிஸ் மற்றும் நியாண்டர்தால் போன்ற இனங்கள் தோண்றின.
ஆனால் இந்த பற்கள் மேலே குறிப்பிட்ட எந்த இனத்துடனும் பொருந்தி போகவில்லை. மற்ற இன மனிதர்களின் பற்களை போல இது இல்லை. இது தனித்துவமாக இருக்கிறது. அதாவது 16 மனித பற்கள் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளில் மூன்றாவது கடைவாய்ப்பற்கள் (ஞானப்பற்கள்) குறிப்பிடத்தக்க அளவில் சிறியதாக உள்ளன. இது நவீன மனிதர்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அம்சம். நமக்கு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் உணவுப் பழக்கவழக்க மாற்றங்களுக்கு ஏற்ப, தாடை சுருங்கியிருக்கிறது.
ஆனால் கடைவாய்ப்பற்களின் வேர்கள் தடிமனாகவும் வலுவாகவும் இருந்திருக்கின்றன. இதுதான் விஞ்ஞானிகளை குழப்புகிறது. இது சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆசியாவிற்கு குடிபெயர்ந்த ஹோமோ எரக்டஸ் போன்ற பழமையான மனித இனத்திற்குதான் இப்படி இருக்கும். அப்படியெனில் ஒரே இனத்தில் ஒரு பல் நவீன மனிதர்களை போலவும், ஒரு பல் பழமையான மனிதர்களை போலவும் இருக்கிறது என அர்த்தம். இது எப்படி சாத்தியம்?
அப்படியெனில் நமக்கு தெரியாத, நாம் கண்டுபிடிக்காத ஒரு தனி மனித இனம் வாழ்ந்து மறைந்திருக்கிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. பற்களில் மட்டுமல்லாது தடை மற்றும் உடல் அமைப்புகளிலும் இந்த முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே இது தொடர்பான ஆய்வை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பதற்கு மூன்று காரணங்களை ஆய்வாளர்கள் யூகித்துள்ளனர்.
முதல் காரணம்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகூடு, அங்கீகரிக்கப்படாத ஒரு புதிய இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது நவீன மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கிளையைக் குறிக்கலாம். இது கிழக்கு ஆசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம். இந்த மரபு ஹோமோ சேபியன்ஸ் கிளையிலிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்து, நியாண்டர்தால் அல்லது டெனிசோவன் இனங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கலாம்.
இரண்டாவது காரணம்
இல்லையெனில் ஆரம்பகால நவீன மனிதர்களுக்கும், பல லட்சம் ஆண்டுகளாக சீனாவில் வாழ்ந்து வந்த ஹோமோ எரக்டஸ் மக்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டு அதன் மூலம் பிறந்தவர்களாக இருக்கலாம்.
மூன்றாவது காரணம்
இது கொஞ்சம் பழமைவாத விளக்கம்தான். அதாவது உள்ளூர் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப இங்கு வாழ்ந்த மனித இனம் தனியாக பரிணாமமடைந்த இருக்கலாம். உதாரணத்திற்கு மலை பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு, சமதள பரப்பில் வசிப்பவர்களைவிட நுரையீரல் பெரியதாக இருக்கும். காரணம் அவர்களின் உடல் காலம் காலமாக மலையேற்றத்திற்கு பழக்கப்பட்டிருக்கிறது என்பதால்தான். அப்படியான மாற்றம் இந்த மனித இனத்திற்கு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications