கைதவறி உடைத்த பிரேஸ்லெட்டு... ரூ.28 லட்சம் விலை சொன்ன கடைக்காரர்... கிறுகிறுத்து விழுந்த பெண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜீங்: சீனாவில் ஒரு கடையில் பிரேஸ்லெட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது அதை தவறுதலாக உடைத்துவிட்டார். விலை டேக்கை பார்த்தபோது கடையிலேயே மயங்கி விழுந்தார்.

பொதுவாக அனைத்து கடைகளிலும், அதிலும் கண்ணாடி, பீங்கான் உள்ளிட்ட விலையுயர்ந்த, எளிதில் உடையக் கூடிய பொருள்களை கையால் தொட்டு பார்க்கும் போது கவனமாக கையாள வேண்டும்.

அச்சமயம் அந்த பொருள் உடைந்துவிட்டாலோ, அல்லது சேதமடைந்துவிட்டாலோ அப்பொருள் விற்கப்பட்டதாக கருதப்படும் ("consider it sold if broken" signs in stores?). மேலும் அதற்கான விலையை உடைத்தவரிடையே வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பர்.

சீனாவில் ஒரு கடையில்...

சீனாவில் ஒரு கடையில்...

அதுபோல் சீனாவில் உள்ள ஒரு கடையில் விலையுயர்ந்த பிரேஸ்லெட்டை பார்வையிட்டார். அப்போது கைத்தவறி கீழே போட்டு விட்டதால் அந்த பிரேஸ்லெட் உடைந்து விட்டது.

பெண் மயக்கம்

பெண் மயக்கம்

அந்த பிரேஸ்லெட்டில் விலை 44,100 டாலர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 லட்சம். அப்போது கடைக்காரர் அந்த பிரேஸ்லெட்டின் விலை 3 லட்சம் யென்கள் என்றவுடன் அந்த பெண் அச்சமடைந்தார். அப்போது அந்த பெண் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது அவர் மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு...

மருத்துவமனைக்கு...

உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பெண்ணின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இழப்பீட்டை பேசி தீர்த்து கொள்ள கடைக்காரர் முடிவு செய்தார். இதனால் இந்த விவகாரம் போலீஸுக்கு தெரியப்படுத்தவில்லை.

70,000 யென்கள் இழப்பீடு

70,000 யென்கள் இழப்பீடு

இதைத் தொடர்ந்து அந்த பிரேஸ்லெட்டின் விலை 3லட்சம் யென்கள் அளவுக்கு மதிப்பில்லை என்று இணையதளத்தில் பரவலாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் 70,000 யென்களை இழப்பீடாக தர முன்வந்துள்ளனர்.

கவுண்டமணி காமெடி

கவுண்டமணி காமெடி

இதை பார்க்கும் போது ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கோவை சரளாவும், கவுண்டமணியும் ஒரு கடைக்கு சென்று அங்கிருந்த ஒரு மூலிகை வேரை ஒரு துளி பிட்டு மெல்லுவர். அதற்கு அந்த கடைக்காரர் பணம் கேட்பார். உடனே தன்னிடம் உள்ள காக்கிநாடா புகையிலையை அந்த கடைக்கார பெண்ணை நுகர வைத்து அவரை மயங்க செய்யும் காட்சிதான் நம் கண் முன் ஓடுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A chinese lady who was seeing bracelet in a shop it slipped and broke. When she was informed that the bracelet was worth 300,000 Yuan, the woman faints.
Please Wait while comments are loading...