ஆப்கானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானத்தின் சக்கர பகுதிகளில் மனித உடல் பாகங்கள்-ஷாக் தகவல்
கத்தார்: தாலிபான்கள் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானப் படையின் விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்பாகங்கள் சிதறி ஒட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமாகிவிட்டது. தாலிபான்கள் 1990களில் மிக கொடூரமான ஆட்சியை நடத்தினர். இதனால் மீண்டும் அத்தகைய ஆட்சியில் அகப்படுவோம் என்பது ஆப்கானியர்களின் அச்சம்.

தப்பி ஓட முயற்சி
இதனையடுத்து காபூல் எப்போது தாலிபான்கள் வசமானதோ அந்த நிமிடம் முதல் நாட்டைவிட்டே தப்பி ஓட முயற்சிக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள். ஒருகட்டத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்க விமானம்
பின்னர் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானப் படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கி தங்களது நாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்றன. அப்படி அமெரிக்காவின் விமானப் படைக்கு சொந்தமான சி17 குளோபல் மாஸ்டர் விமானம் ஒன்று காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அமெரிக்க தூதரக ஊழியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக தரை இறங்கியது அந்த விமானம்.

வானில் இருந்து விழுந்து மரணம்
ஆனால் எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி ஓடிவிட வேண்டும் என நினைத்து காத்திருந்தவர்கள் பேருந்துகள், ரயில்களில் ஏறுவதைப் போல விமானத்தை பிடித்து தொங்கியபடி ஏற முயன்ற காட்சிகள் ஆப்கான் பேரவலத்தை வெளிப்படுத்தின. பின்னர் 600க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் போர் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட படங்களும் வெளியாகின. அப்படி புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் சக்கரங்களுடன் தங்களை கட்டிப் போட்டுக் கொண்டு அதாவது விமானத்தில் தொங்கியபடியே பறந்த சிலர் விமானம் மேலே கிளம்பிய போது தூக்கி வீசப்பட்டு காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையிலேயே சிதறி விழுந்து மாண்டு போயினர். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோ காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

விமான சக்கரங்கள் மனித உடல் பாகங்கள்
இந்நிலையில்தான் காபூலில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரை இறங்கிய அமெரிக்க விமான சக்கரத்தில் மனித உடல் பாகங்கள் சிதறி ஒட்டிக் கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய மனிதப் பேரவலத்தின் சாட்சிகளாக ஆப்கான் ஆட்சி மாற்றம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது நெஞ்சை நடுநடுங்க வைக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications