பழிக்குப் பழி... நெதன்யாகு கதையை முடித்ததா ஈரான்? உலக அளவில் பரபரப்பை கிளப்பிய 2 போட்டோ! பரபரப்பு!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நெதன்யாகு தாக்குதலுக்குள்ளதாகவும் ஒரு போட்டோ பரவி வருகிறது.
இஸ்ரேல் -அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போர் தற்போது 15-வது நாளை எட்டியுள்ளது. இந்த சூழலில் கடந்த மார்ச் 13ஆம் தேதி நெதன்யாகு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியிருந்தார். ஆனால் அந்த வீடியோவை கவனமாக பார்த்த சில சமூக வலைதள பயனர்கள், அவர் கையை அசைக்கும் போது ஒரு கட்டத்தில் ஆறு விரல்கள் இருப்பது போல காட்சி தெரிகிறது என்று சுட்டிக்காட்டினர்.

ஈரான் இஸ்ரேல் போர்
இதன் காரணமாக அந்த வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் பரவத் தொடங்கியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது. சிலர் நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அவரது இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
நெதன்யாகு வீடியோ சர்ச்சை
இந்த வதந்திகளுக்கு சமூக வலைதள தளங்களில் பயன்படுத்தப்படும் ஏஐ கருவிகள் விளக்கம் அளித்துள்ளன. குறிப்பாக Grok AI வெளியிட்ட விளக்கத்தில், அந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு ஐந்து விரல்களே உள்ளன என்றும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் அசைவு காரணமாக உருவான மாயத் தோற்றமே அது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மற்றொரு புகைப்படமும் வைரலாகியுள்ளது. அதில் நெதன்யாகுவைப் போன்ற முகம் கொண்ட ஒருவர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்குள் கிடப்பது போன்ற காட்சி காணப்படுகிறது. அருகில் சில ராணுவ வீரர்கள் அவருக்கு உதவி செய்யும் காட்சியும் உள்ளது.
நெதன்யாகு காயம்
இந்த புகைப்படத்தை சிலர், சமீபத்திய தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததாகவும் அல்லது அவர் கொல்லப்பட்டதாகவும் கூறி பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படமும் செயற்கை நுண்ணறிவு அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நெதன்யாகு காயமடைந்ததாக உறுதி செய்யப்பட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும், இஸ்ரேல் அரசு அல்லது அமெரிக்க அதிகாரிகள் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இஸ்ரேல் - ஈரான்
மேலும் நெதன்யாகு தொடர்ந்து இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும், போர் நிலை குறித்து நாட்டின் மக்களிடம் உரையாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கின. அதன் பின்னர் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த மோதலில் பல முக்கிய ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதுடன், பொதுமக்களும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றம் உலக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப்












Click it and Unblock the Notifications