காபூல் குண்டுவெடிப்பு.. என் கையில் தான் சிறுமி உயிரைவிட்டாள்.. கலங்க வைத்த மொழிபெயர்பாளர்
காபூல் : காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அருகே வியாழக்கிழமை முதல் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்ற முயன்ற போது, ஒரு பெண் குழந்தை தனது கைகளிலேயே இறந்ததாக வேதனையுடன் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் வயதானவர்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர். காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அருகே வியாழக்கிழமை முதல் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர், குண்டுவெடிப்பில் இருந்து ஒரு பெண் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அந்த பெண் குழந்தை தனது கைகளிலேயே இறந்ததாக வேதனையுடன் கூறினார்.

யார் அவர்
பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை கார்ல் என்று மட்டுமே அடையாளம் காட்டிய அந்த மொழி பெயர்ப்பாளர், சிபிஎஸ் நியூஸிடம், விமான நிலைய நுழைவாயில்களில் ஒன்றான அபே கேட் அருகே வெடிப்பு ஏற்பட்டபோது அவர் தனது காரில் வந்ததாக கூறினார்.

சிறுமி உயிரிழப்பு
காயமடைந்தவர்களில், ஒரு பெண் குழந்தையைப் பார்த்ததாக கார்ல் கூறினார், குழந்தையை அவர் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓட முயன்றார். அப்போது நடந்தவற்றை அவர் கூறும் போது "அதிக போக்குவரத்து இருந்தது. நான் வெளியே சென்று சிறுமியை மீண்டும் அழைத்து வந்தேன். நான் ஒருவழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், நான் எவ்வளவோ முயற்சித்தேன். சிறுமிக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன். ஆனால் சிறுமி என் கைகளியே இறந்துவிட்டாள் ... என்றார் துயரத்துடன்.

60 ஆப்கானியர்கள்
பெண் குழந்தை யார் என்பது அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அபே கேட் மற்றும் அருகிலுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 60 ஆப்கானியர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video

90 பேர் மரணம்
இறந்தவர்களில் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications