For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதாவுக்காக திரளும் அமெரிக்கத் தமிழர்கள்... 25 நகரங்களில் மூன்றாவது நாளாக அஞ்சலி கூட்டங்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத அனிதாவின் மறைவுக்கு, அமெரிக்கத் தமிழர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

அட்லாண்டா, டல்லாஸ், மினியாபோலிஸ், டெட்ராய்ட், நியூஜெர்ஸி, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஃப்ரான்ஸிஸ்கோ மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Anita condolence meetings continue in US

பெரியவர்கள் குழந்தைகள் உட்பட ஒவ்வொரு நகரிலும் நூற்றுக்கணக்கில் பங்கேற்ற தமிழர்கள் உணர்ச்சிமயமாக காணப்பட்டார்கள். தமிழகத்திற்கு நீட் வேண்டாம், கல்வியை மாநிலத்திற்கு திரும்பக் கொடு, டாக்டர் அனிதாவுக்கு அஞ்சலி போன்ற பதாகைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தாங்கி இருந்தார்கள்.

அமெரிக்காவில் திங்கட்கிழமை தொழிலாளர் தினம் என்பதால் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும். பெரும்பாலோனோர், வெளியூர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ள நேரமாகும். இருப்பினும், குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்படும் இந்த இரங்கல் கூட்டங்களில், ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பது, அனிதா மரணத்தின் தாக்கத்தை தெரிவிப்பதாக இருக்கிறது.

Anita condolence meetings continue in US

இன்று திங்கட்கிழமை 10 மாநிலங்களில் 15 நகரங்களில் இரங்கல் கூட்டங்கள் நடைபெறுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தில் நான்கு நகரங்களிலும், இலனாய் மாநிலத்தில் இரண்டு நகரங்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஃப்ளோரிடா - காலை 11 மணி - 16400 Emerald Estates Dr, Weston
கனெக்ட்டிகட் - மதியம் 2 மணி - 1547 New Britain Ave, Farmington
தெற்கு கரோலைனா - மாலை 4:30 மணி - 2 Murray Blvd, Charleston
வடக்கு கரோலைனா - மாலை 5 மணி - Church Street Park, Morrisville
ஓஹாயோ - மாலை 5 மணி - Brecksville Metro Park, Brecksville
இலனாய் - மாலை 4 மணி- 1400 Grandview Dr, Champaign
இலனாய் - மாலை 6 மணி - Ned Brown Forest Preserve, Elk Grove Village
மேரிலாண்ட் - மாலை 6 மணி - Cockeysville
மேரிலாண்ட் - மாலை 6 மணி - Centennial Park, Ellicott City
மேரிலாண்ட் - மாலை 6 மணி - Gaithersburg
மேரிலாண்ட் - மாலை 6 மணி - Black Hill Regional Park, Boyds
மிசோரி - மாலை 6:30 மணி- Queen State Park, St Louis
வர்ஜினியா - மாலை 6 மணி - McNair Elementary School Parking Lot, Herndon
டெலவர் - மாலை 6:30 மணி - Glasgow Park, Newark
பென்சில்வேனியா - மாலை 6:30 மணி - Valley Forge Historical Park, King of Prussia

Anita condolence meetings continue in US

இரங்கல் கூட்டங்களுடன் நின்று விடாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள செயற்பாட்டாளர்கள், அமெரிக்க அளவில் ஒன்று கூடி ஆலோசித்து வருகிறார்கள்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பப் பெறவேண்டும், தமிழகத்திற்கு நீட் வேண்டாம் போன்ற தீர்மானங்கள் விவாதிக்கப் படுகிறது.

Anita condolence meetings continue in US

தமிழக மாணவர்களின் கல்விக்காக, அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று திரண்டு போராட ஆயத்தமாகி வருகிறார்கள்.

Recommended Video

    அனிதா மரணம் பற்றி ரஜினி, கமல்-வீடியோ

    -இர தினகர்

    English summary
    American Tamils are gathering in hundreds during the long weekend across the US offering condolences for Anita. There were candlelight vigil in many cities on Saturday and Sunday. More than 15 cities are having it on Monday, the labor day holiday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X