For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்!

Google Oneindia Tamil News

கோபன்ஹேகன்: விண்வெளியில் ஒரு சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அருகருகே 3 சூரியன்கள் இருக்கும் சூரிய குடும்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் உள்ள பல கேலக்சி எனப்படும் நட்சத்திர மண்டலங்களில் ஒன்று மில்கி வே எனப்படும் பால்வெளி மண்டலம்.

இந்த மில்கி வேயில் ஏராளமான சூரிய குடும்பங்கள் உள்ளன. அவற்றை சோலார் சிஸ்டம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

விண்வெளி

விண்வெளி

அதில் ஒரு சூரிய குடும்பத்தில்தான் நாம் வசிக்கும் இந்த பூமியும் உள்ளது. இதேபோல் எண்ணிலங்காத சூரியன்களும் அதை சுற்றி வரும் கிரகங்களும் விண்வெளியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தொலைநோக்கிகள் செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் கொட்டிக்கிடக்கும் என்னற்ற அதிசயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இவ்வுலகிற்கு அளித்து இருக்கிறார்கள்.

அருகருகே 3 சூரியன்கள்

அருகருகே 3 சூரியன்கள்

அந்த வகையில் தற்போது புதிய ஆச்சரியமூட்டும் தகவலை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ளனர். சூரிய குடும்பம் என்றால் ஒரு சூரியனும் அதை சுற்றி ஏராளமான கிரகங்களும் சூழலும் என்றே நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால், அருகருகே ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல.. நான்கு சூரியன்கள் இருக்கிறது என்ற தகவலை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதைதான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஒன்றான 2 சூரியன்கள்

ஒன்றான 2 சூரியன்கள்

முதலில் 4 சூரியன்கள்கள் அருகருகே இருந்ததாகவும், காலப்போக்கில் 3 வது சூரியன் 4 வது சூரியனுடன் சேர்ந்துகொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் 2 சூரியன்கள் அருகருகே இருந்தபடி ஆர்பிட் எனப்படும் சுற்றுவட்டப்பாதையை உருவாக்கி இருப்பதை முதல் முறை காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் மெய்சிலிர்த்தபடி தெரிவித்து உள்ளார்கள். HD 98800 என அழைக்கப்படும் இந்த நட்சத்திரங்கள் TW Hydrae எனப்படும் விண்மீன் தொகுப்பிலிருந்து 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

12 மடங்கு எடை அதிகம்

12 மடங்கு எடை அதிகம்

இந்த இரட்டை சூரியன்கள் உருவாக்கியுள்ள சுற்றுவட்டப்பாதை பூமியை போன்றே 24 மணி நேரத்துக்கு ஒரு சுழற்சியை கொண்டுள்ளது. இந்த 2 சூரியன்களின் மொத்த எடை நமது சூரியனின் எடையை விட 12 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 3 வது சூரியன் நமது சூரியனை காட்டிலும் 16 மடங்கு எடை அதிகம் கொண்டதாகவும், உள்வட்ட சுற்றுப்பாதைக்குள் 2 நட்சத்திரங்களை ஆண்டுக்கு 6 முறை சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

இதுகுறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக பேராசிரியர் அலெஜாண்ட்ரோ விக்னா கோமெஸ் தெரிவிக்கையில், "இதுவரை நாம் பார்த்ததிலேயே மிகவும் அருகாமையில் 3 சூரியன்கள் இருப்பது இதுதான்." என்றார். நாசாவின் செயற்கைக்கோள்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து ஏராளமான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 3 சூரியன்கள் குறித்த இந்த தகவலை கண்டுபிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக சீனாவை சேர்ந்த பின் லியூ என்ற ஆராய்ச்சியாளரின் துணையுடன் அலெஜாண்ட்ரோ விக்னா கோமெஸ் இதனை கண்டுபிடித்து இருக்கிறார்.

English summary
Astronomers found 3 stars in a single solar system: விண்வெளியில் ஒரு சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அருகருகே 3 சூரியன்கள் இருக்கும் சூரிய குடும்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X