Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் 3 கொரோனா கேஸ்கள்.. 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்திற்கு லாக்டவுன் போட்ட சீனா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள Yuzhou நகரத்தில் 3 பேருக்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 11.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரம் முழுவதற்குமே லாக்டவுன் அமல்படுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது சீனா.

China imposes Locks Down in Yuzhou for only 3 Covid Cases

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் பல்வேறு வடிவங்களில் ஆட்டுவித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரையில் கொரோனா பரவலைத் தடுக்க ஏற்கனவே எல்லைகளை மூடி வைத்திருக்கிறது. பல மாகாணங்களிலும் முழு வீச்சில் லாக்டவுனை அமல்படுத்தி இருக்கிறது.

மத்திய சீனாவில் Henan மாகாணத்தில் உள்ள Yuzhou நகரத்தில் மொத்தம் 11.7 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரத்தில் 3 பேருக்கு மட்டும்தான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 3 பேரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த Yuzhou நகரம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் திங்கள்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Yuzhou நகரில் ஏற்கனவே பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சுற்றுலா தலங்கள், ஷாப்பிங் மால்கள் ஏற்கனவே இந்த நகரில் மூடப்பட்டுள்ளது. சீனாவில் செவ்வாய்க்கிழமையன்று மொத்தம் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் Henan மாகாணத்தில் மட்டும் 8 பேருக்கு பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கொரோனா மரணங்களும் ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவானதாக இருக்கிறது. அதேநேரத்தில் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+