For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோயாளிகளின் கடைசி நிமிடங்கள்.. கடுமையான சளி, இறுமல்.. மூச்சு திணறல்.. சீனத்தின் சோகம்!

வைரஸின் கொடுமை மிக கொடூரமாக காணப்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்

Google Oneindia Tamil News

பீஜிங்: கொரோனா தாக்கி இறந்தவர்களின் உடல் அவ்வளவு மோசமான நிலைமையில் இருந்துள்ளது... கடுமையான அவஸ்தையை அனுபவித்த பிறகே.. நோயாளிகளுக்கு உயிர் போயுள்ளதும் தெரியவந்துள்ளது!

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    கொரோனா வைரஸ்.. இதுதான் நோய், இதுதான் அறிகுறி, இதுதான் மருந்து, என்று அறுதியிட்டு சொல்ல முடியாத ஒரு கிருமி இது.. உலகம் கண்ட எத்தனையோ வைரஸ்களை விட மிக மோசமானது.. கொடூரமானது!

    உலக விஞ்ஞானிகள், இப்போதைக்கு காய்ச்சல், இருமல், சளி, நடுக்கம் என்று ஒருசில அறிகுறிகள் சொன்னாலும், நாக்கில் டேஸ்ட் தெரியவில்லை என்றாலும், வாசனையை நுகர முடியாத திறன் ஏற்பட்டாலும் அதுவும் கொரோனா அறிகுறி என்கிறார்கள். இதாவது பரவாயில்லை.. எந்த அறிகுறியும் இல்லாமல்கூட இந்த வைரஸ் பரவும் என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.

    சுவாச பாதை

    சுவாச பாதை

    அதிக உயிர்பலியை சந்தித்த சீனாவில் இறந்தவர்களின் சிலரது உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதுதான் டாக்டர்களே அதிர்ந்து விட்டனராம்.. இந்த வைரைஸ் சுவாச பாதையில் தடித்த சளியை உருவாக்கி உள்ளது.. அந்த சளி வெகு சீக்கிரத்தில் உறைந்துவிடுகிறது.. இப்படி உறைந்துவிடுவதால், சுவாச பாதையை அடைத்து கொள்கிறது.. இந்த பாதையை விலக்கிவிட மருந்தின் மூலம் சிகிச்சை செய்து, அடைப்புகள் நீக்கப்பட வேண்டும்.. அப்போதுதான் மூச்சுக்குழாய் பாதை திறக்கும்.. இதுதான் தீர்வு.

    மூச்சு திணறல்

    மூச்சு திணறல்

    ஆனால், இப்படி அடைப்பை நீக்கி, பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவைப்படும். அதற்குள் நோயாளி இருமி, இருமி, மூச்சு திணறல் ஏற்பட்டு சொல்ல முடியாத அவஸ்தைக்குள்ளாகி கடைசியில் உயிர் பிரிகிறது. போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதுதான் இந்த வைரஸின் தாக்கம் எவ்வளவு அபாயகரமானது என்பது டாக்டர்களுக்கு தெரியவந்துள்ளது.

    ஆலோசனைகள்

    ஆலோசனைகள்

    அதற்காகத்தான் ஒருசில டிப்ஸ்களையும், ஆலோசனையும், டாக்டர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க சொல்கிறார்கள்.. சுடச்சுட பானங்கள் ஏதாவது குடிக்க வேண்டும், காபி, டீ, சூப், வெந்நீர் என 20 நிமிஷத்துக்கு ஒருமுறையாவது குடிக்க வேண்டும்... இதில் அதிகமாக வெந்நீரை குடிக்க சொல்கிறார்கள்.. உணவுக்குழாய் வழியாக வெந்நீர் சென்று, ஜீரணத்தை அதிகப்படுத்தும்.. அடிக்கடி வெந்நீருடன், உப்பு, லெமன் அல்லது வினிகிரையும் சேர்த்து வாயை கொப்பளிக்க வேண்டும் என்கிறார்கள்.

    வைரஸ்

    வைரஸ்

    நம்ம போட்டிருக்கும் டிரஸ்ஸில்கூட இந்த வைரஸ் ஒட்டிக் கொள்ளுமாம்.. அதனால் வெளியில் சென்றுவந்தால், உடனே அணிந்திருக்கும் துணியை தோய்க்க வேண்டும், குளித்துவிட வேண்டும்.. துணிகளை நல்ல வெயிலில் உலர்த்தினால் வைரஸ் ஓரளவு கொல்லக்கூடும்.. எந்த உலோகத்தின் மேற்பரப்பையும் வெறுங்கைகளால் தொடக்கூடாது.. ஏனென்றால் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் அப்படியே தங்கியிருக்கும்.. அதனால்தான் கதவின் கைப்பிடியைகூட தொடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

    பழங்கள்

    பழங்கள்

    20 நிமிஷத்துக்கு ஒருமுறை 20 செகண்ட் நம் கைகளை கழுவ வேண்டும்.. நிறைய காய்கறி, பழவகைளை சாப்பிட வேண்டும்.. விட்டமின் C நல்லது.. தொண்டை கரகரப்பு மூலம் கொரோனா தொற்று 3 முதல் 4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, அதன்பிறகு மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலை சென்றடையும்... அதனால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி வராமல் இருக்க மேற்கூறியவைகளை பின்பற்றி ஓரளவு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்கிறார்கள்.

    English summary
    coronavirus: chinese doctors tips on coronavirus infect
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X