For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊப் டூ வாஷ்: இனி, உங்க டாமியே துணி துவைக்கும்....

Google Oneindia Tamil News

ரோம்: நாய்கள் குரைக்கும் சத்தத்தின் மூலம் இயங்கும் புதிய ரக வாஷிங்மிஷின்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

நன்றிக்கும், புலனாய்வுக்கும் பேர் போனவை நாய்கள். மனிதன் தனது தேவைகளுக்கு தகுந்த படி தனது செல்லப் பிராணிகளை பழக்கி வைத்துக் கொள்கிறான். அதனடிப்படையில் தான், பேப்பர், பால் பாக்கெட் எடுத்து வருவது, பந்து பொறுக்கிப் போடுவது போன்ற வேலைகளில் நாய்கள் செயல் படுவதைக் கவனித்திருப்பீர்கள்.

அந்தவகையில், தற்போது நாய்கள் தானாகவே, மெஷினை இயக்கி துணி துவைத்து தங்களது எஜமான்களுக்கு உதவும் வகையில் புதிய வாஷிங்மெஷின் தயாரிக்கப் பட்டுள்ளது.

நாய்களுக்கு தகுந்த மாதிரி...

நாய்களுக்கு தகுந்த மாதிரி...

பிரிட்டனைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷினில் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேஷ கைப் பிடி அமையப் பெற்றுள்ளது.

ஊப் டூ வாஷ்....

ஊப் டூ வாஷ்....

அத்துடன் ‘ஊப் டு வாஷ்' என்ற இந்த வாஷிங் மெஷின் நாய்களின் குரைப்புக்கு தகுந்தாற்போல் செயல்படும்திறன் உள்ள கருவியொன்றும் பொருத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.

விஷேச தேவையுள்ளவர்கள்....

விஷேச தேவையுள்ளவர்கள்....

இந்தப் புதிய வகை வாஷிங்மெஷின்கள், இயல்பாக செயல்பட முடியாத விசேஷ தேவையுள்ளவர்களுக்காக தயாரிக்கப் பட்டது. இதன்கென, பயிற்சியளிக்கப்பட்ட நாய் இந்த சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் இயந்திரம் செயல்பட ஆரம்பிக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

தன்னிச்சையானது....

தன்னிச்சையானது....

கூடுதலாக இந்த மெஷின் தன்னிச்சையாக தேவையான அளவு நீரை பயன்படுத்தி சலவையை மேற்கொள்ளும் திறன் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In collaboration with Miele, UK laundry company JTM Service created Woof to Wash, the world’s first “dog-operated” washing machine. This voice-activated machine has been specially designed with dog height-appropriate buttons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X