யுஏஇ-க்கு செம அடி.. பங்காளியை போட்டுத் தாக்கிய ஈரான்! பற்றி எரிந்த புஜைரா.! பதற வைக்கும் வீடியோ!
துபாய்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான போர்ட் ஆஃப் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலின் காரணமாக எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் தீப்பற்றி எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில், புஜைரா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்களை குறிவைத்து பல ட்ரோன்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அங்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகள் சில நேரத்திற்கு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ப்ளூம்பெர்க் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவசர மீட்பு நடவடிக்கை
சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், புஜைரா நகரில் உள்ள அவசர சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய எண்ணெய் மையம்
புஜைரா துறைமுகம் உலகளவில் மிக முக்கியமான எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஹோர்மூஸ் நீரிணைக்கு வெளியே அமைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் அந்த பாதையை தவிர்த்து நேரடியாக ஏற்றுமதி செய்ய இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் "பங்கரிங் ஹப்" ஆகவும் இந்த துறைமுகம் அறியப்படுகிறது. இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையில் இந்த துறைமுகம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் பதற்றம்
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில், உலகளவில் முக்கியமான எண்ணெய் மையங்களில் ஒன்றான புஜைரா துறைமுகத்தில் தாக்குதல் நடந்ததாக வெளியாகியுள்ள தகவல், சர்வதேச எண்ணெய் சந்தையிலும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A fire broke out at oil storage facilities at the UAE’s Port of Fujairah early Saturday, following an attack pic.twitter.com/rsms0pzYtx
— Anadolu English (@anadoluagency) March 14, 2026
இஸ்லாம் நாடுகள்
இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் போர் விமான தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் அருகில் உள்ள இஸ்லாமிய நாடுகளான பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமான புஜைரா துறைமுகத்தில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் எண்ணெய் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு












Click it and Unblock the Notifications