For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 23 பேர் தீயில் கருகி பலி

இந்தோனேசியா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஜககார்த்தா : இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேட்டிலைட் நகரமான இந்தோனேசியாவின் தலைநர் ஜனார்டாவில் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் இன்று காலையில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அந்த பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள இந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் சேதமடைந்த நிலையில் ஆலைக்குள் இருந்த 23 பேர் உடல் கருகி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலையில் பணியில் இருந்த 43 பேர் பலத்த தீக்காயங்கள் அடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு தயாரிக்கும் ஆலை என்பதால் அங்குள்ள வெடிபொருட்கள் வெடித்துச் சிதறி வருகின்றன இதனால் அந்தப் பகுதியே கருப்புப் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

English summary
At least 23 people have been killed and 43 injured after an explosion at a factory making fireworks sparked a fire near Jakarta, fire offficials were battling to settle ablaze.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X