பேஸ்புக்கில் செய்யும் தில்லாலங்கடி... முன்னாள் தலைமையதிகாரி திடுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பேஸ்புக் எல்லா மக்களையும் கண்காணிக்கிறது என அங்கு தலைமையதிகாரியாக வேலை பார்த்த ஷான் பார்க்கர் குற்றம்ச்சாட்டி இருக்கிறார். மேலும் அது குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைமையதிகாரியாக இருந்தவர் ஷான் பார்க்கர். இவர் மார்க் சூக்கர்பர்க்கரால் அதிரடியாக வேலையை விட்டு நீக்கப்பட்டார். இவர் பேஸ்புக் நிறுவனம் தொடங்கிய 45வது நாளில் இருந்து அங்கு வேலை பார்த்து வந்தார். பேஸ்புக்கை உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கிறது.

Former Facebook president says Facebook is harm to people

தற்போது இவர் பேஸ்புக் குறித்து மோசமாக குற்றச்சாட்டி இருக்கிறார். பேஸ்புக் மக்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணிக்கிறது என்றுள்ளார். மக்களின் அனுமதி இல்லாமலே அவர்களை பேஸ்புக் நோட்டமிடுவதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பேஸ்புக்கில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். அதில் இருக்கும் சிறிய சிறிய ஆப்ஷன் தொடங்கி அப்ளிகேஷனில் நீல நிறம் வரை அனைத்தும் மக்களை வசியப்படுத்தவே என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஷான் பார்க்கர் பேசும் போது ''பேஸ்புக் மக்களுக்கே தெரியாமல் நிறைய தீய வேலைகளை செய்து வருகிறது. கடவுளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் மட்டுமே இந்த உண்மை தெரியும்'' என்று பேசியுள்ளார். இவரது இந்த கருத்து இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Facebook president says Facebook is harm to people. He also says it dumps children and also god only knows what it's doing to children's brains.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற