Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்தார் முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்.. 600 ஆண்டுகளில் முதல்முறையாக தானாக பதவியை துறந்தவர்

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன்: முன்னாள் போப் ஆண்டவர் 16வது பெனடிக் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது, 95. போப் ஆண்டவர் பதவியிலிருந்து தானாக யாருமே பதவி விலகவில்லை என்ற நிலை 1415ம் ஆண்டு முதல் இருந்தது. ஆனால், சுமார் 600 ஆண்டுகள் கழித்து அதாவது, 2013ல் போப் பதவியில் இருந்து தானாகவே பதவி விலகியவர்தான் 16வது பெனடிக்.

கத்தோலிக்க மதத் தலைவராக போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாட்டிகன் நகரில் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுபவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார்.

இவருக்கு முன்பு போப் ஆண்டவராக இருந்தவர் 16ம் பெனடிக். ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். 2005 ஏப்ரல் மாதம் 19ம் தேதி போப் ஆண்டவராக பதவியேற்றபோது அவர் தனது பெயரை 16ம் பெனடிக் என மாற்றம் செய்து கொண்டார்.

 பதவியை துறந்த போப்

பதவியை துறந்த போப்

2005ல் போப் ஆண்டவராக பதவியேற்ற 16ம் பெனடிக் ஏறக்குறைய 8 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2013 பிப்ரவரி 28 ல் போப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் வயது முதிர்வால் உடல்நல பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில் போப் பதவியை துறந்தார். அதன்பிறகு அவர் வாட்டிகன் நகரில் உள்ள மேட்டர் எக்லேசியா ஆலயத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.

உடல் நலக்குறைவால் மறைவு

உடல் நலக்குறைவால் மறைவு

95 வயது நிரம்பிய நிலையில் 16ம் பெனடிக் வயது முதிர்வால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் 16ம் பெனடிக்கை நேரில் சந்தித்த தற்போதைய போப் பிரான்சிஸ் ஆறுதல் கூறினார். மேலும் உடல்நலம் சரியாக பிரார்த்தனை செய்வதாக உறுதியளித்து வந்தார். இந்நிலையில் தான் முன்னாள் போப் 16ம் பெனடிக் உடல் நலக்குறைவால் இன்று காலமாகி உள்ளார் என வாட்டிகன் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 600 ஆண்டுக்கு பிறகு பதவி துறப்பு

600 ஆண்டுக்கு பிறகு பதவி துறப்பு

பொதுவாக போப் ஆண்டவராக இருப்பவர்கள் தங்களின் மரணம் வரை பதவியில் நீடிப்பார்கள். ஆனால் தற்போது காலமான 16ம் பெனடிக் முன்கூட்டியே பதவியை கடந்த 2013ல் துறந்தார். இதற்கு முன்பு 1415ம் ஆண்டில் கிரிகரி என்பவர் போப் பதவியில் இருந்து விலகினார். அதற்கு பிறகு சுமார் 600 ஆண்டுகள் கழித்து 16ம் பெனடிக் பதவியை துறந்தார். அப்போது அவருக்கு வயது 85 ஆக இருந்தது.

பதவியில் வெடித்த சர்ச்சைகள்

பதவியில் வெடித்த சர்ச்சைகள்

தற்போது மறைந்துள்ள 16ம் பெனடிக் 8 ஆண்டுகள் வரை போப் ஆண்டவராக இருந்தார். இவர் பதவியில் இருந்த காலத்தில் பலமுறை சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக குருமார்களால் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பின. இதற்காக அவர் மன்னிப்பு கோரியிருந்தார். அதன்பிறகு உடல் நலனை காரணம் கூறி அவர் கடந்த 2013ல் போப் பதவியை துறந்தார். மேலும் இவர் ஜெர்மனியின் முனிச்சில் 1977 முதல் 1982 காலக்கட்டத்தில் பேராயராக இருந்தார். அப்போது முறைகேடுகள் பற்றி அவர் விசாரிக்கவில்லை என கூறப்பட்டது பூதாகரமாக வெடித்தபோது அவர் மன்னிப்பு கடிதம் அனுப்பியது அவருக்கு பின்னடைவாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+