For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்!

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலானது இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றில் போட்டியிட்டனர்.

France emmanuel Macron elected as President for second term

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெற்றதே இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் மய்ய இமானுவேல் மேக்ரானும் தீவிர வலதுசாரியான மரைன் லே பென்னும் இரண்டாவது சுற்றில் மோதினர்.

இந்த தேர்தலுக்கான முதல் சுற்று கடந்த 10ஆம் தேதி நடந்தது. அப்போது இமானுவேல் 50 சதவீத வாக்குகளையே பெற்றார். இதற்கு அடுத்து இமானுவேலும் மரைனும் இரண்டாவது சுற்றில் பங்கேற்றனர். இதில் இமானுவேல் 58.2 சதவீத வாக்குகளும், மரைன் லே பென் 41.8 சதவீத வாக்குளையும் பெற்றார்.

இதையடுத்து இமானுவேல் மேக்ரான் அதிபர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேக்ரான் அதிபராக இருந்து வருகிறார். 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒருவரே மீண்டும் அதிபராவது இதுதான் முதல் முறை. மேக்ரான் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பிரான்ஸ் நாட்டு கொடியையும் ஐரோப்பிய யூனியன் கொடியையும் பறக்கவிட்டனர்.

ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா ஓவியம் வாங்க வற்புறுத்தப்பட்டேன் - யெஸ் வங்கி நிறுவனர் திடுக் தகவல்ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா ஓவியம் வாங்க வற்புறுத்தப்பட்டேன் - யெஸ் வங்கி நிறுவனர் திடுக் தகவல்

மேலும் மேக்ரான் மேக்ரான் என்ற கோஷத்தையும் எழுப்பினர். புதுவையில் பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் புதுவை மற்றும் சென்னையில் 4 ஆயிரத்து 500-க்கும்.மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றனர். புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

English summary
France Emmanuel Macron elected as President for second term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X