For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா - மே.இ.தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 21ல்...அட்டவணை வெளியீடு

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஆன்டிகுவா: மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி விளையாடும் நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எங்கு போட்டிகள் நடைபெறும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, 49 நாட்கள் மேற்குகிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஜூலை 6ம் தேதி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

 Full schedule of India-West Indies Test series 2016

ஜூலை 9 - 10ம் தேதி நடைபெறும் இருநாள் பயிற்சி ஆட்டத்திலும், தொடர்ந்து ஜூலை 14- 16 நடைபெறும் 3 நாள் பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் ஜூலை 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது போட்டி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை ஜமைக்காவிலும், 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 9 முதல் 13 வரை செயின்ட். லூசியாவிலும் நடைபெறுகிறது.

4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 23ம் தேதி இந்திய அணி நாடு திரும்புகிறது.

முன்னதாக 2011 ல் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டோணி தலைமையிலான இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian cricket team will be travelling to West Indies for a four-match Test series in July following the limited overs series with Zimbabwe, West Indies Cricket Board confirmed on Thursday (June 2).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X