Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஒரே கம்பெனியில் 84 வருஷம் வேலை? கின்னஸ் சாதனை படைத்த 100 வயது வால்டர்

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனிரோ : ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி 100 வயதான முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய அவசர காலகட்டத்தில் ஒருவர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவது பெரும் கடினமாகும். அவரவர் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ள நிலையில், ஒருபுறம் ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

100 வயதான முதியவர்

100 வயதான முதியவர்

இப்படிப்பட்ட சூழலில் பிரேசிலில் 100 வயதான முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்ற உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக வால்டர் ஓர்த்மேன் என்பவர் பணியை தொடங்கினார்.

ஒரே நிறுவனத்தில் பணி

ஒரே நிறுவனத்தில் பணி


நீண்ட காலம் அதே நிறுவனத்தில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பணியாற்றிய அவர், பல நிறுவனங்கள் அழைத்தும் எங்கும் செல்லவில்லை. அங்கு சிறப்பாக பணியாற்றியதால், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது விற்பனை மேலாளராக உள்ள அவர், தற்போது 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்.

பெரும் ஆச்சரியம்

பெரும் ஆச்சரியம்

பணி உயர்வு, அத்துடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர் 84 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இவருக்கு சக ஊழியர்கள் மற்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நூறு வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றும் அவர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என உற்சாகத்துடன் கூறுகிறார் வால்டர்.

கின்னஸ் உலக சாதனை

கின்னஸ் உலக சாதனை

அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுபோல, ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறும் அவர், வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்து வருவதாகவும், தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவும் தவறுவதில்லை என கூறியுள்ளார். 84 ஆண்டுகளாக வேறு நிறுவனத்திற்கு மாறாமல், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார். கடமையாற்றுவதிலும் கின்னஸ் உலக சாதனை படைத்த அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+