"இங்கேயுமா".. பாத்ரூமில் துடைப்பத்துடன் நுழையும் புள்ளிகள்.. ஷூ பாலிஷ், கிச்சனில் சமையல்.. என்னவாம்
கென்யாவில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்
நைரோபி: பாத்ரூம்களை கழுவி சுத்தம் செய்து தந்தும், சாப்பாடு செய்து தந்தும், ஷூக்களுக்கு பாலிஷ் செய்தும் பொதுமக்களின் வாக்குகளை கேட்டு வருகிறார்கள் கென்யா நாட்டு அரசியல்வாதிகள்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் எல்லா தேர்தல்களும் ஒரே நேரத்தில் வரப்போகிறது.. வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் என ஒரே நேரத்தில் நடக்க உள்ளதால் கென்யாவே பரபரப்பாகி உள்ளது.
வழக்கம்போல், இந்த தேர்தலிலும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் போட்டியிடுகிறார்கள்.. இதில், பல பிரமுகர்கள் தற்போதும் பதவிகளில் இருப்பவர்கள்தான்.. மீண்டும் சீட் கேட்டு களமிறங்கி உள்ளனர்.
பெரும்பாலான வேட்பாளர்கள் மிகப்பெரிய பணக்காரர்களும்கூட.. ஆனாலும், பொதுமக்களிடம் ஓட்டுக்களை வாங்குவதற்காக எந்த லெவலுக்கும் கீழே இறங்கி சென்று, அவர்களை கவரும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

டைலரிங் மிஷின்
தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்துக்கு சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் ஆடம்பரமான அரசியல்வாதிகள், வாக்காளர்களை கவருவதற்காக பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்றுவிட்டனர்.. நம்ம ஊரிலாவது வேட்பாளர்கள், டீக்கடையில் புகுந்து டீ போட்டு தருவார்கள்.. அதிலும் கடந்த சட்டசபை தேர்தலின்போது, மாஜி அமைச்சர் ஜெயக்குமார், தையல்கடையில் புகுந்து, ஒரு பெண்ணின் டைலரிங் மிஷினை வாங்கி, அதில் கோணல் மாணலாக ஒரு துணியை தைத்துதந்து ஓட்டுக் கேட்டார்..

பாத்ரூம்கள்
இன்னொரு மாஜி, புரோட்டா கடையில் புரோட்டா போட்டு தந்தார்.. திமுக வேட்பாளர் ஒருவர், துணிகளுக்கு ஐயர்ன் செய்து தந்தார்.. நடிகை கவுதமி, ஒரு சாலையோர ஹோட்டலில் தோசை சுட்டு தந்து ஓட்டுக் கேட்டார். ஆனால் கென்யாவில் ஒருபடி மேலே போய்விட்டார்கள்... அங்கு தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் கையில் பக்கெட், துடைப்பத்துடனும், துர்நாற்றம் வீசுகிற பொதுக்கழிவறைகளை நோக்கி ஓடுகிறார்கள்.. அந்த டாய்லெட்டை சுத்தமாய் கழுவிவிட்டு அதன்பிறகு வெளியே வந்து ஓட்டுக் கேட்கிறார்கள்..

பக்கெட்கள்
இப்படி பாத்ரூம்களை கழுவிவிடுபவர் சாதாரண போஸ்டிங்கிற்காக இதை செய்யவில்லை.. நைரோபி நாட்டின் கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற இகாதே என்ற வேட்பாளர்தான் அங்குள்ள பொதுக்கழிவறைகளை அதிகமாக கழுவிவிட்டு, சுத்தம் செய்து ஓட்டு கேட்டாராம்.. அதுமட்டுமல்ல, அவர் நைட் கிளப்களுக்கு சென்று, அங்கு மது பரிமாறும் வேலையிலும் ஈடுபடுவது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரச்சாரம் தொடங்கும் வரையில், இவர்களுக்கெல்லாம் சந்தைகள், பொதுக்கழிப்பிடங்கள் எங்கே இருக்கின்றன என்பதுகூட தெரியாது... இப்போது நடித்து கொண்டிருக்கிறார்கள் என்று வாக்காள பெருமக்களே வேதனையுடன் சொல்கிறார்கள்..

டிராமா
அதேபோல, பெண் வாக்காளர்களை கவர்வதற்காக வீடுகளுக்குள்ளேயே நுழைந்து விடுகிறார்கள்.. பெண்கள் சமைத்து கொண்டிருந்தால், கத்தியை பிடுங்கி இவர்கள் காய்கறி நறுக்கித்தருகிறார்கள்.. ஆனால் இவ்வளவும் இவர்களின் நாடகம் என்பது அந்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்றாலும், அரசியல்வாதிகள் இந்த வேலையாவது செய்யட்டும் என்று அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்களாம்... அதேசமயம், இவர்கள் போடும் நாடகங்களால் யாரும் ஈர்க்கப்படவில்லை என்கிறார்கள் அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர்கள்.. ஆனாலும், கென்யாவில் நம்ம அரசியல்வாதிகளையே மிஞ்சிவிடுவார்கள் போலயே..!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications