For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் காடுகளை சுற்றி பார்க்க வந்த 100 சுற்றுலா பயணிகளை கடத்திய பழங்குடியினர்.. பரபரக்கும் காரணம்!

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் இருக்கும் அமேசான் காட்டில் 100 சுற்றுலாப் பயணிகளை பழங்குடியினர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளில் ஒன்று பிரேசில் நாட்டில் இருக்கும் அமேசான் காடுகள். இங்கு பல அரிய வகை மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் அரிய வகை விலங்கினங்களும் வசித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த காட்டு பகுதியை சுற்றி பார்க்க 100 சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை அந்த பகுதியின் மலைவாழ் மக்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 100 பேரில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

குழந்தைகளும் கடத்தல்

குழந்தைகளும் கடத்தல்

அது போல் குழந்தைகளும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த 3 ஆம் தேதி குனினிகோ எனும் ஆற்றில் இந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்களை பழங்குடியினத்தவர்கள் கடத்தி சென்றனர். இது தொடர்பாக பழங்குடியினத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

இதனை தொடர்ந்து அனைத்து சுற்றுலா பயணிகளையும் அவர்கள் விடுவித்துள்ளார்கள். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று 2500 டன் கச்சா எண்ணெய் குனினிகோ ஆற்றில் கசிந்திருந்ததாம். இதை அகற்ற பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதை அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்துவிட்டதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்தான் இதுபோன்ற கடத்தல் சம்பவம் நடந்ததாக பழங்குடியினத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை 8 நாட்களுக்கு விடுவிக்காமல் இருக்கவுள்ளதாக பழங்குடியினத்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் 24 மணி நேரத்திலேயே அவர்களை விடுவித்தனர்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளில் கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். தென் அமெரிக்காவின் நீண்ட பைப்லைன் மூலம் இந்த கச்சா எண்ணெய் கசிவு நடந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய்யை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு கொண்டு செல்ல 800 கி.மீ. தூரத்திற்கு இந்த பைப்லைன் அமைக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் கசிவு

கச்சா எண்ணெய் கசிவு

இந்த ஆற்றில் படகுகள் செல்வதால்தான் கச்சா எண்ணெய் கசிவதாக பழங்குடியினத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால்தான் இந்த ஆற்றில் வரும் படகுகளை பழங்குடியினத்தவர்கள் வழிமறிக்கிறார்கள். ஏற்கெனவே வந்த படகுகளால் பைப்லைனில் 21 செ.மீ. அளவுக்கு ஓட்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Amazon forest tribals capture 100 tourist who travelled in a boat to visit the rain forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X