அமெரிக்காவின் அதிநவீன F-15 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்? ஷாக் வீடியோ
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன F-15 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வீழ்ந்த விமானம்
இந்த போர் மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில், நிலைமை மோசமாக இருக்கிறது. இதற்கிடையே குவைத் மீது பறந்த F-15 விமானம் வீழ்ந்துள்ளது. இந்த விமானம் அமெரிக்காவுக்குச் சொந்தமானதா இல்லை இஸ்ரேலுக்குச் சொந்தமானதாக என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த விமானம் தீப்பிழம்புகளுடன் சுழன்று கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின. விமானிகள் இருவரும் பாதுகாப்பாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது. குவைத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த F-15 விமானம் வீழ்ந்துள்ளது.
மேலும், F-15 விமானத்து யார் என்பதிலும் தெளிவான தகவல்கள் இல்லை. ஒரு பக்கம் தவறுதலாக நட்பு நாடுகளின் படைகளே சுட்டு ('friendly fire') வீழ்த்தி இருக்கலாம் என்கிறார்கள். அதேநேரம் ஈரான் தாங்களே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
என்ன நடந்தது
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலெம் விமானப்படைத் தளத்திற்கு இந்த விமானம் விபத்துக்குள்ளானது. தீப்பிடித்து வானில் சுழன்று விழுந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.. அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் அல்லது அது எந்தப் படையைச் சேர்ந்தது என்பது இன்னும் தெளிவில்லை. இந்த இரட்டை எஞ்சின் போர் விமானம் F-15E அல்லது F/A-18 ரகமாக இருக்கலாம். குவைத் விமானப் படையும் F/A-18 ரக ஜெட் விமானங்களை வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது..
🚨BREAKING: AN MILLION US F-15 FIGHTER JET HAS JUST CRASHED IN KUWAIT.
— Bull Theory (@BullTheoryio) March 2, 2026
The pilot is safe and has been rescued. pic.twitter.com/Kpjg98mqBX
அமெரிக்கத் தூதரகம்
இது மட்டுமின்றி குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து புகை கிளம்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் அமெரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானதா இல்லையா என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லை. மேலும், தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா அல்லது குவைத் இதுவரை எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
அதேநேரம் தூதரகத்தில் இருந்த அமெரிக்கப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 'தூதரகத்திற்கு வர வேண்டாம்' என்றும் தலைமறைவாகவும், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பிராந்திய போர்?
இப்படி மத்திய கிழக்கில் ஒரு நாட்டில் ஏற்பட்ட போர் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பாதித்துள்ளது. இதுவரை இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த படைகள் மட்டுமே தாக்கி வருகிறது. இதர மத்திய கிழக்கு நாடுகள் நேரடியாகத் தாக்குதல்களில் பங்கேற்கவில்லை. ஒருவேளை அந்த நாடுகளும் தாக்குதல்களை ஆரம்பித்தால் நிலைமை மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அதேநேரம் மறுபுறம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை
-
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications