For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் நாட்டுக்காரர் தலையை துண்டித்த அல்ஜீரிய தீவிரவாதிகள்! ஐஎஸ்ஐஎஸ்சுக்கு ஆதரவாக படுகொலை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாரீஸ்: ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்' தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தும் அமெரிக்காவுக்கு பிரான்சு ஆதரவு அளித்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ் போர் விமானங்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குண்டு வீச்சை தொடங்கின.

இந்த நிலையில் அல்ஜீரியாவுக்கு மலையேற்றம் மற்றும் குகைகள் குறித்து ஆய்வு நடத்த சென்ற பிரெஞ்ச் நாட்டுக்காரர் ஹெர்வ் குயர்தெல் (55) என்பவரை அந்த நாட்டில் செயல்படும் ‘ஜீன்ட் அல் - ஹிலாபா' என்ற தீவிரவாத அமைப்பினர் கடத்தி பிணைக் கைதியாக பிடித்தனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளாம்.

ISIS-linked terrorists behead French hostage in new video

அல்கொய்தா தீவிரவாதிகளிடம் இருந்து பிரிந்து வந்த ஜீன்ட் அல் - ஹிலாபா தீவிரவாதிகள், அல்ஜீரியாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் கடத்தல் குறித்த வீடியோவை அந்த அமைப்பினர் நேற்று வெளியிட்டனர். அதில், பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள பிரான்ஸ் மலையேற்ற வீரர் ஹெர்வ் குயர்தெல் உள்ளார். அவர் அருகே முகத்தில் துணி கட்டிய 2 தீவிரவாதிகள் உள்ளார். அவர்கள் குயர்தெலை துப்பாக்கி முனையில் வைத்துள்ளனர்.

அதன் பின்னர் பிரான்ஸ் அரசுக்கு தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில், இன்னும் 24 மணி நேரத்தில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பிரான்ஸ் நிறுத்த வேண்டும். இல்லாவிடில், பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள குயர்தெல் தலையை துண்டித்து படுகொலை செய்வோம் என தெரிவித்தனர்.

இதற்கு பிரான்ஸ் சம்மதிக்காத நிலையில், ஹெர்வ் குயர்தெல் தலையை துண்டித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் தீவிரவாதிகள். தனது நாட்டு பிரஜை படுகொலை செய்யப்பட்டதை பிரெஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹொல்லான்டேவும் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கர்கள் தலையை வெட்டியிருந்தனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இப்போது அவர்களது ஆதரவு தீவிரவாத அமைப்பும் அதேபோன்ற படுகொலையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
An Algerian extremist group linked to the Islamic State has decapitated a French hostage in retaliation for France's airstrikes against militants, French President Francois Hollande confirmed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X