For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லிபியா: பெங்காஸி நகரை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

திரிபோலி: லிபியாவின் 2வது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கம் அறிவித்துள்ளது.

லிபியா அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து கிளர்ச்சியாளர்கள் கை மேலோங்கி வருகிறது. இதனால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மூடியது.

Islamists capture key military base in Libya

ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன. லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பான அன்சர் அல் ஷரியா கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதுவரை வன்முறைக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிர் பயத்தில் நாட்டை விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறும் மக்கள் அண்டை நாடான துனிசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அன்சர் அல் ஷரியா கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அறிவித்து தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய அன்சர் அல் ஷரியா என்ற இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

பெங்காஸியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

English summary
Islamist groups seized the headquarters of the Libyan army's special forces in Libya's second city Benghazi after days of fighting, as a huge blaze raged at a fuel depot near the capital's airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X