For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவைத்தில் ரமலான் மாதம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்: டோன்ட் மிஸ் இட்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இந்த ஆண்டு (2014) புனித ரமலான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் குவைத் கைத்தான் பகுதியில் உள்ள கே-டிக் தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலில் நடைபெறும்.

K-Tic arranges for special programmes ahead of Ramadan

நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு,

தினந்தோறும்... மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை...

திக்ரு / துஆ மஜ்லிஸ்
சிறப்பு இஃப்தார் (நோன்புக் கஞ்சியுடன்)
மக்ரிப் தொழுகை
இரவு உணவு

தினந்தோறும்... இரவு 7:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை...

அண்டர்ஸ்டான்ட் குர்'ஆன் அகாடெமி வழங்கும் திருக்குர்ஆன் பயிற்சி

தினந்தோறும்... இரவு 8:15 மணி முதல் இரவு 10:00 மணி வரை...

இஷா தொழுகை
சிறப்பு தராவீஹ் தொழுகை (20 ரக்அத்கள்)
வித்ர் தொழுகை (20 நாட்களுக்கு மட்டும்)
திக்ரு / துஆ மஜ்லிஸ்
நாள்தோறும் ஒரு நல்ல தகவல் / திக்ர் / துஆ
இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்

வாரந்தோறும்... வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு...

ஜூன் 27 - புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி
ஜூலை 4 - புனித மக்கா வெற்றி (பத்ஹ் மக்கா)
ஜூலை 11 - புனித பத்ர் யுத்தம்
ஜூலை 18 - லைலத்துல் கத்ரை தேடுவோம் மற்றும் சுழலும் சொல்லரங்கம்
ஜூலை 25 - ஜகாத் சிறப்பு ஆய்வரங்கம்

இறுதிப் பத்து நாட்களில்... தினந்தோறும்...

கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
குர்ஆன் ஹல்கா தஜ்வீத் பயிற்சி
இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்
வித்ர் தொழுகை
திக்ரு / துஆ மஜ்லிஸ்

இறுதிப் பத்து நாட்களில்... ஒற்றைப்படை இரவுகளில்...

தஸ்பீஹ் தொழுகை
திக்ரு / துஆ மஜ்லிஸ்

சிறப்பு நிகழ்ச்சிகள்

மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

நாள்: 25.07.2014 வெள்ளிக்கிழமை (ரமலான் பிறை 28)
நேரம்: மாலை 4:00 மணி முதல்...
இடம்: பெரிய கூடாரம், மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல், ஷர்க், குவைத்.

நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாள்: 28.07.2014 / 29.07.2014 திங்கள் / செவ்வாய் கிழமை (ஷவ்வால் பிறை 1)
நேரம்: சரியாக காலை 6:00 மணிக்கு...
இடம்: கே-டிக் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,ஃகைத்தான், குவைத்.

மாபெரும் சமுதாய ஒற்றுமை மாநாடு

நாள்: 28.07.2014 / 29.07.2014 திங்கள் / செவ்வாய் கிழமை (ஷவ்வால் பிறை 1)
நேரம்: இரவு 6:45 முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை
இடம்: மஸ்ஜித் மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ, ஃபஹாஹீல், குவைத்.

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்

மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அஷ்ஷைஃக்

மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி

பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்

மாபெரும் புனித ரமலான் போட்டிகள்

வினாடி வினா
திருக்குர்ஆன் கிராஅத் / ஸூராக்கள் மனப்பாடம்
சங்கத்தின் பத்தாம் ஆண்டு முன்னோட்ட போட்டி

சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளி/ஒலிப்பரப்பு செய்யப்படும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு (இஃப்தார் நிகழ்ச்சிகளில் வெள்ளி / சனிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) நோன்புப் பெருநாள் அன்று பெற்றோர்களுடன் தொழுகைக்கு வரும் சிறார்களுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு.

English summary
K-Tic has arranged for special programmes during the holy month of Ramadan. Don't miss it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X