For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் கே-டிக் நடத்தும் புனித ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்: டோன்ட் மிஸ் இட்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சிகள் கைத்தானில் உள்ள கே-டிக் தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலில் நடைபெறும்.

K-Tic's Ramadan special programmes in Kuwait

நிகழ்ச்சிகள் குறித்த விவரம் வருமாறு,

தினந்தோறும்... மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை...

திக்ரு / துஆ மஜ்லிஸ்
சிறப்பு இஃப்தார் (நோன்புக் கஞ்சியுடன்)
மக்ரிப் தொழுகை
இரவு உணவு

தினந்தோறும்... மக்ரிப் முதல் இஷா வரை...

தஜ்வீது முறையுடன் எளிய வழியில் ஆலிம்கள் நடத்தும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

தினந்தோறும்... இரவு 8:15 மணி முதல் இரவு 10:00 மணி வரை...

இஷா தொழுகை
தராவீஹ் தொழுகை (20 ரக்ஆத்கள்)
வித்ர் தொழுகை (முதல் 20 நாட்களுக்கு மட்டும்)
திக்ரு / துஆ மஜ்லிஸ்
நாள்தோறும் ஒரு நல்ல தகவல் / திக்ர் / துஆ
இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்

வாரந்தோறும்... வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு...

ஜூன் 19 / பிறை 2 : புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி
ஜூலை 26 / பிறை 9 : புனித மக்கா வெற்றி (ஃபத்ஹ் மக்கா)
ஜூலை 03 / பிறை 16 : புனித பத்ர் யுத்தம்
ஜூலை 10 / பிறை 23 : ஜகாத் ஆய்வரங்கம் மற்றும் லைலத்துல் கத்ர்
ஜூலை 17 / பிறை 30 : சிறப்பு சுழலும் சொல்லரங்கம்

இறுதிப் பத்து நாட்களில்... தினந்தோறும்...

கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
குர்ஆன் ஹல்கா தஜ்வீத் பயிற்சி
இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினரின் சிறப்பு சொற்பொழிவுகள்
வித்ர் தொழுகை
திக்ரு / துஆ மஜ்லிஸ்

இறுதிப் பத்து நாட்களில்... ஒற்றைப்படை இரவுகளில்...

தஸ்பீஹ் தொழுகை
திக்ரு / துஆ மஜ்லிஸ்

சிறப்பு நிகழ்ச்சிகள்

நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஷவ்வால் பிறை 1
நேரம்: சரியாக காலை 6:00 மணிக்கு...
இடம்: கே-டிக் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,ஃகைத்தான், குவைத்.

மாபெரும் சமுதாய ஒற்றுமை மாநாடு

ஷவ்வால் பிறை 1
நேரம்: இரவு 6:45 முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை
இடம்: மஸ்ஜித் மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ, ஃபஹாஹீல், குவைத்.

தராவீஹ்,, கியாமுல் லைல் தொழுகைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளுக்காக தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்

மவ்லவீ அல்-ஹாஃபிழ் அல்-ஹாஜ் அஷ்-ஷைஃக் ‘‘திருக்குர்ஆன் விரிவுரையாளர்'' ஏரல் அ. பீர் முஹம்மது பாகவீ அவர்கள், ஃகதீப், ‘ஜாமிவுல் கபீர்' பள்ளிவாசல்,

ஜங்ஷன், திருநெல்வேலி / பொறுப்பாளர், ‘மன்பவுல் ஃகைராத்' மகளிர் கல்லூரி, ஏரல், நெல்லை மாவட்டம் / ஆசிரியர், ‘சிந்தனைச் சரம்' மாத இதழ், மதுரை

மாபெரும் புனித ரமலான் போட்டிகள்

வினாடி - வினா
திருக்குர்ஆன் கிராஅத் / ஸூராக்கள் மனப்பாடம்

குறிப்பு:

சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்கத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளி/ஒலிப்பரப்பு செய்யப்படும்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு (இஃப்தார் நிகழ்ச்சிகளில் வியாழன் / வெள்ளி / சனிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் கலந்து கொள்ள

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு வரும் சிறார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படும்.
வாகனங்களை நிறுத்த இட வசதி உண்டு
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு

English summary
K-Tic has arranged for lot of special programmes which will be held in the holy month of Ramadan in Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X