For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஊரடங்குகளை அமல்படுத்துவது மட்டுமே கொரோனா வைரஸை அழிக்க போதுமான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Lockdown not enough to eradicate coronavirus, says WHO

கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது.

இத்தகைய ஊரடங்குகள், லாக்டவுன்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை வெளியே நடமாட வேண்டாம்; வீடுகளில் முடங்கி இருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்துமே மருத்துவ துறை மீதான குவிகிற அழுத்தங்களை குறைக்கக் கூடியவை மட்டும்தான்.

கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி! கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி!

ஊரடங்கு மற்றும் லாக்டவுனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸை அழிப்பதற்கான 2-வது வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை உங்கள் நாட்டுக்குள் நுழையவிடக் கூடாது என்கிற முதல் வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டுவிட்டன.

அதேநேரத்தில் இந்த 2-வது வாய்ப்பில் எப்படி கொரோனாவை அழிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி. கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தொற்று பரவலை கண்டுபிடித்தல் என்பவை மட்டுமே போதுமானது அல்ல. இந்த கொரோனா வைரஸை எப்படி தடுத்து அழிப்பது என்பதும் முக்கியம்.

Recommended Video

    TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

    இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

    English summary
    World Health Organisation Director General Tedros Adhanom said that a lockdown will not be enough to eradicate the deadly Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X