நேரத்தை மிச்சப்படுத்தலாம் ஓ.கே.. அதுக்காக இப்படியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கடைக்குள் சென்றால் காரை பார்க் செய்யும் நேரம் வீணாகும் என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த இந்த சீனர் என்ன செய்கிறார் பாருங்களேன்.

காலம் பொன் போன்றது என்பது பழமொழி. அதை உழைக்காத சோம்பேறிகளுக்காகவும், படிக்காமல் நேரத்தை வீணாக்குபவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.

இந்த எந்திரமயமான உலகத்தில் ஒரு நொடி பொழுதை கூட வீணடிக்காமல் பயனுள்ள வேலைகளில் ஈடுபட்டால்தான் நாம் பிழைக்க முடியும் என்று சூழல் உருவாக்கியுள்ளது.

 நேரக்கணக்கில் சம்பளம்

நேரக்கணக்கில் சம்பளம்

நாம் பணியாற்றுவதற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. நாம் எத்தனை மணி நேரம், எத்தகைய சிறப்பாக பணியாற்றினோம் என்பதன் அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

 வெளிநாடுகளில் ரொம்ப மோசம்

வெளிநாடுகளில் ரொம்ப மோசம்

இன்னும் வெளிநாடுகளில் நேரம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் அதை வீணடிப்பதை அவர்கள் விரும்பவில்லை. இதன் எதிரொலியாக காரிலோ, பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணித்து கொண்டே சாப்பிடுவது , புத்தகங்களை படிப்பது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 சீனர் ஒருவர்

சீனர் ஒருவர்

அந்த வகையில் கடைக்கு சென்றால் வண்டியை பார்கிங்கில் விட்டு விட்டு செல்வதற்கு குறைந்தபட்சம் விடுவதற்கு 10 நிமிடங்களும், எடுப்பதற்கு 15 நிமிடங்களும் ஆகும். இதனால் மொத்தம் கிட்டதட்ட அரைமணி நேரம் மிச்சமாகிறது. இதைக் கருத்தில் கொண்ட சீனர் ஒருவர் பார்க்கிங் டைமிங்கை மிச்சப்படுத்துவதற்காக காரை கடைக்குள் செலுத்தினார்.

 கடைக்காரர் அதிர்ச்சி

கடைக்காரர் அதிர்ச்சி

ஆமாங்க, நிஜம்தான் இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சீனாவின் ஜென்ஜியாங் என்ற பகுதியில் உள்ள கடையில் விற்பனையாளர் உட்கார்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று கடைக்குள் நுழைந்தது. இதனால் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தபோதிலும் ஏதோ வினோதமாக உள்ளதாகவே நினைத்தார்.

சிப்ஸ் குடுப்பா?

அப்போது காரில் இருந்த நபர் கடைக்காரரிடம் சிப்ஸ் மற்றும் ஒரு பாட்டில் யோகர்ட்டை கேட்டார். அதை உடனடியாக கொடுத்த கடைக்காரர் அவருக்கு ரசீதும் கொடுத்தார். இதுகுறித்து பேஸ் புக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பார்க்கிங் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த ஐடியாவாம். இதுமாதிரி சரவணா ஸ்டோர்ஸ் குள்ள போகலாமா ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A bizarre video circulating online shows the exact moment a man drove his car into a convenience store.
Please Wait while comments are loading...