For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்சார் தொழில்நுட்பம் மூலம் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் 2 கப்பல்கள்

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீருக்கு அடியில் தேடும் பணியில் 2 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலுக்குள் விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேடல் பணியில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டி

கருப்புப் பெட்டி

விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் வரும் 7ம் தேதி முடிகிறது. இதையடுத்து அந்த பெட்டியில் இருந்து வரும் ஒலி வரும் 7ம் தேதி முதல் மெல்ல மெல்ல குறைந்து வரும் 12ம் தேதி முற்றிலுமாக நின்றுவிடும்.

தேடல்

தேடல்

கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீருக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணி துவங்கியுள்ளது.

கப்பல்கள்

கப்பல்கள்

கருப்புப் பெட்டியை தேடும் பணியில் இங்கிலாந்து கடற்படையைச் சேர்ந்த ஹெச்.எம்.எஸ். எக்கோ கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த ஓஷன் ஷீல்ட் கப்பலும் ஈடுபட்டுள்ளன.

மிதக்கும் பொருட்கள்

மிதக்கும் பொருட்கள்

கடலில் ஏதாவது பொருட்கள் மிதக்கிறதா என்பதை தேடல் பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் மற்றும் கப்பல்கள் பார்க்கும். அப்படி பொருட்கள் கிடைத்து அது விமானத்தின் பாகங்களாக இருந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

English summary
Two military ships are using sensor technology to search the black box of the missing Malaysian plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X