For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரின் அமெரிக்க சுற்றுப்பயண நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி அமெரிக்க அழகி தொகுப்புரை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அங்கு நடைபெறும் விழா ஒன்றினை அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்ட பெண் தொகுத்து வழங்க உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்து அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதை மோடியும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி மற்றும் ராணுவ மந்திரி சக் ஹேகலும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தனர்.

அமெரிக்காவில் மோடி உரை:

அமெரிக்காவில் மோடி உரை:

இந்நிலையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்கிறார். அதில் ஒருபகுதியாக, 28 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்கம் கார்டனில் பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

20 ஆயிரம் இந்தியர்கள்:

20 ஆயிரம் இந்தியர்கள்:

இதில் 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள். மோடியின் இந்த உரையை அமெரிக்காவில் உள்ள 15க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய வம்சாவளி அழகி:

இந்திய வம்சாவளி அழகி:

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை இந்திய வம்சாவளியை சேர்ந்த நினா டாவுலுரி தொகுத்து வழங்குகிறார். பிரபல ஊடகம் ஒன்றில் செய்தி தொகுப்பாளராக இருக்கும் இவர் 2014 ஆம் ஆண்டின் அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டவராவார். இவரே முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அழகி ஆவார்.

கட்டணம் கிடையாது:

கட்டணம் கிடையாது:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எவ்வித கட்டணமோ, டிக்கெட்டோ கிடையாது. இலவசமாக பங்குபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A high-profile public reception organised by the Indian community in the US in honour of Prime Minister Narendra Modi in New York on September 28 would be hosted by Miss America 2014 Nina Davuluri and a popular Indian-origin news anchor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X