For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூபிடருக்குப் போகும் வழியில்.. "ஆன் தி வேயில் ஒரு ரெக்கார்டை"யும் படைத்து விட்டுப் பயணிக்கும் ஜூனோ!

Google Oneindia Tamil News

நாசா: அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள ஜூனோ விண்கலம், ஜூபிடர் கிரகத்தை நெருங்கி வரும் நிலையில் ஒரு புதிய சாதனையைப் படைத்து விட்டு தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

நாசா கடந்த 2011ம் ஆண்டு ஜூபிடரை ஆராய அனுப்பிய விண்கலம்தான் ஜூனோ. முற்றிலும் வாயுக்கள் நிரம்பிய கிரகமான ஜூபிடரை, தற்போது ஜூனோ நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் அது ஒரு சாதனையை படைத்துள்ளது.

NASA’s Juno probe sets solar power distance record en route to Jupiter

சூரிய சக்தியில்...

அதாவது சூரியனிலிருந்து மிக மிக நீண்ட தொலைவில் தற்போது ஜூனோ உள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தியே இயங்கியும் வருகிறது.

புதிய சாதனை...

இதன் மூலம் அதிக தூரத்திலிருந்து சூரிய சக்தியைப் பெற்று இயங்கி வரும் ஒரே விண்கலம் என்ற சாதனையைத்தான் தற்போது ஜூனோ படைத்துள்ளது.

ரோசெட்டா விண்கலம்...

ஜனவரி 13ம் தேதி இந்தப் புதிய சாதனையை ஜூனோ படைத்தது. அப்போது அது சூரியனிலிருந்து 492 மில்லியன் மைல்கள் தூரத்தில் இருந்தது. இதற்கு முன்பு ஐரோப்பாவின் ரோசெட்டா விண்கலம் இந்த சாதனையை வைத்திருந்தது. அதை ஜூனோ முறியடித்துள்ளது.

வால் நட்சத்திரத்தை ஆராய...

ரோசெட்டா விண்கலமானது 67பி என்ற வால் நட்சத்திரத்தை ஆராய அனுப்பப்பட்டது. ரோசெட்டாவும் சூரிய சக்தியைப் பயன்படுத்தியே இயங்கி வந்தது. சூரியனை விட அதிக தூரத்தில் உள்ள வால் நட்சத்திரத்துக்குப் பயணித்து சாதனை படைத்திருந்தது ரோசெட்டா. தற்போது அதை முறியடித்துள்ளது ஜூனோ.

19000 தனிப்பட்ட செல்கள்...

நான்கு டன் எடை கொண்டது ஜூனோ விண்கலம். இதில் 3 சூரிய சக்தி பேனல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 9 மீட்டர் நிளம் கொண்டது. இவற்றின் மொத்தப் பரப்பானது 261 சதுர அடியாகும். மொத்தம் இதில் 19,000 தனிப்பட்ட செல்கள் உள்ளன.

சாதனைப் பேனல்...

இதுவரை வடிவமைத்திராத மிகப் பெரிய சூரிய சக்தி பேனலும் இதுதான். இப்போது இது சாதனைப் பேனலாகவும் மாறியுள்ளது.

4% மட்டுமே...

பூமியின் சுற்றுப் பாதையில் இந்த பேனலானது 14 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தி கொண்டதாகும். இது ஜூபிடரை மேலும் நெருங்கும்போது சூரிய ஒலியிலிரு்து 4 சதசவீதம் மட்டுமே கிடைக்கும்.

420 வாட்டுகளாகக் குறையும்...

அப்போது ஜூனோவின் மின் உற்பத்தியானது 486 வாட்டுகளாக இருக்கும். அது ஜூபிடரை சென்றடையும்போது மேலும் குறைந்து 420 வாட்டுகளாக குறைந்து விடும்.

ஜெனரேட்டர்கள்...

நியூ ஹாரிஸா்ஸ், வாயேஜர், காசினி உள்ளிட்ட விண்கலங்களில் ரேடியோ ஐசோடோப் தெர்மோ எலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டன என்புது நினைவிருக்கலாம்.

ஜூலை மாதம்...

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜூபிடரை ஜூனோ நெருங்கும். அப்போது அது சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான ஜூபிடரின் காந்தப் புலங்கள், ஈர்ப்பு சக்தி குறித்து ஆராய்ந்து தகவல்களை அனுப்பும். இதன் மூலம் ஜூபிடர் குறித்த பல முக்கியத் தகவல்களை அறிய முடியும் என நாசா நம்புகிறது.

20 மாத ஆய்வு...

20 மாதம் வரை இந்த ஆய்வில் ஜூனோ ஈடுபடும். அதன் பிறகு அதன் சேவையை நாசாவே முடித்து வைத்து விடும். ஜூபிடரில் அது விழ வைக்கப்படும்.

English summary
NASA launched the Juno spacecraft in 2011 on a mission to study Jupiter, and now the spacecraft is almost to its target. Before it reaches the gas giant, Juno has already made history as it sets the distance record for solar power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X