"சாரி, எங்களால் முடியாது.." உக்ரைனைக் கைவிடும் நேட்டோ! கலங்கிய அதிபர் ஜெலன்ஸ்கி.. அடுத்து என்ன?
மாஸ்கோ: உக்ரைனில் போர் தொடர்ந்து உச்சமடைந்து வரும் சூழலில், நேட்டோ அமைப்பு இப்போது எடுத்துள்ள முடிவு உக்ரைன் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஆரம்பித்துள்ள போர் ஒரு வாரத்தைத் தாண்டியும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் போரை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தும் உலக நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும், அவை எதுவும் போரை நிறுத்துவது குறித்து புதினை யோசிக்கக் கூட வைக்கவில்லை என்பதே உண்மை.

உக்ரைன் போர்
ரஷ்ய அதிபர் புதின் போரை ஆரம்பிக்கும் முன்பு சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். அதில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக் கூடாது என்பது தான் முக்கியமானது. இருப்பினும், இதை மேற்குலக நாடுகள் ஏற்க மறுத்தன. அதன் பின்னர் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்துள்ளது. உக்ரைன் இதுநாள் வரை நேட்டோவில் இணைய ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வந்ததது. இந்தச் சூழலில் நேட்டோ இப்போது எடுத்துள்ள முடிவு, உக்ரைன் அதிபருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை
உக்ரைனில் இப்போது போர் தீவிரமடைந்துள்ளது அனைவருக்கும் தெரியும், அந்நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகின்றன. எனவே, உக்ரைனைப் பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக (No fly zone) அறிவிக்க வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இதை நேட்டோ அமைப்பு ஏற்றுக் கொண்டால் போர் பாதிப்பைக் குறைக்கலாம் என்பது அவரது எண்ணம்.

நிராகரிப்பு
இது குறித்து ஆலோசிக்க 30 நாடுகளைக் கொண்ட நேட்டோ அவசர கூட்டத்தை நடத்திய நிலையில், இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாக நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைன் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தால் அங்கு நுழையும் ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டும். இது போரை ஐரோப்பாவிலும் பரவச் செய்யும். இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பேரழிவு ஏற்படும்
இந்தப் போரில் நாங்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போர் உக்ரைனைத் தாண்டி தீவிரமடைவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நேட்டோவுக்கு உள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இந்தப் போர் ஐரோப்பா முழுவதும் பரவினால் அது இன்னும் பேரழிவு ஏற்படுத்தும் வகையில் மாறும். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும், போரை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video

அதிபர் ஜெலன்ஸ்கி தாக்கு
இந்த முடிவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "இன்று நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாடு, பலவீனமான குழப்பமான ஒரு மாநாடு. அதில் பங்கேற்றவர்கள் ஐரோப்பாவின் சுதந்திரத்திற்கு நம்பர் ஒன் முக்கியத்துவம் அளிக்கவில்லை. நேட்டோ அமைப்பு இந்த விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு , உக்ரைன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேலும் ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு தாக்குதலை நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு க்ரீன் லைட் அளிக்கும் வகையிலேயே உள்ளது" என்று சாடியுள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications