நெல்சன் மண்டேலாவுக்கு ‘மனிதநேய சாதனையாளர் விருது’
Subscribe to Oneindia Tamil

கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போதுஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா மற்றும் ஜோசினா மாசெல் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications