For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

பியோங்யாங்: நீர்முழ்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் புதிய வகையிலான ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்தனர். இது வடகொரியா- தென் கொரியா எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Recommended Video

    மீண்டும் ராக்கெட் சோதனை செய்த North Korea.. Japan மற்றும் South Korea கடும் எதிர்ப்பு

    வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வடகொரிய திடீர் திடீரென மேற்கொள்ளும் ராக்கெட் சோதனைகளே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா பரபர ஆலோசனை! 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா பரபர ஆலோசனை!

    இந்தச் சூழலில் தற்போது மற்றொரு ராக்கெட் சோதனையை மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது வட கொரியா.

    ராக்கெட் சோதனை

    ராக்கெட் சோதனை

    நேற்றைய தினம் புதிய ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சென்று தாக்கும் திறன் உடையது. SLBM எனப்படும் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அந்நாட்டின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் 8ஆவது முக்கிய ராக்கெட் சோதனை இதுவாகும்.

    நீர்மூழ்க்கி கப்பல்

    நீர்மூழ்க்கி கப்பல்

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதிய எஸ்எல்பிஎம் ஏவுகணை என்பது நமது நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கடற்படையின் திறன்களையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. வட கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைந்துள்ள உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் சுமார் 450 கிலோமீட்டர் தாண்டி ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் இந்த ராக்கெட் தரையிறங்கியது.

    தென் கொரியா எதிர்ப்பு

    தென் கொரியா எதிர்ப்பு

    அதேநேரம் வடகொரியாவின் இந்த திடீர் ராக்கெட் சோதனைக்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லைப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தென் கோரியா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டை செலுத்துவதற்கு முன் வேறொரு ராக்கெட்டையும் வடகொரியா செலுத்தியதாகவும் இருப்பினும் அது குறித்த தகவல்களைப் பெற முடியவில்லை என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

    அதிகரிக்கும் பதற்றம்

    அதிகரிக்கும் பதற்றம்

    தென் கொரியாவில் அடெக்ஸ் எனப்படும் சர்வதேச விமானம் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. சர்வதேச நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கூடியுள்ள நிலையில், இப்போது இந்த சோதனையை வடகொரிய நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல மற்றொரு அண்டை நாடான ஜப்பானும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இதை மிகவும் வருந்தத்தக்க நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் கிம் ஜாங்

    அதிபர் கிம் ஜாங்

    பொதுவாக இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் இவற்றைப் பார்வையிடுவார் ஆனால், இந்த சோதனையின் போது அதிபர் கிம் ஜாங் நேரில் ஆய்வு செய்யவில்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே சில மாதங்களில் பல கிலோ எடை இழந்த கிம் ஜாங் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வரும் சூழலில், இது அதனை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளது.

    English summary
    North Korea successfully conducted a test firing of a new missile. North Korea and South Korea tension latest updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X