For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜாவில் இன்று நிரித்யசமர்ப்பண்: இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக அரங்கில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் இன்று (12.06.2015) மாலை 4.30 மணிக்கு நிரித்யசமர்ப்பண் என்ற இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7-வது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு எஸ்திலோ இந்தியா என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகிக்கிறார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள போக்குவரத்து துறையின் கமிஷனராக உயர் பதவி வகித்து வரும் தமிழர் டாக்டர் ராஜன் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

நிரித்தயசமர்ப்பண் என்ற நிகழ்ச்சி நடன ஆசிரியை கவிதா பிரசன்னா தன்னிடம் பயின்று வரும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் நடனத்தை அரங்கேற்றும் வகையில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகம்மது தாஹா, பிரசன்னா, கீதா கிருஷ்ணன், சுந்தர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Nrithyasamarpan, Indian classical dance programme will be held in Sharjah on june 12th, the friday. Don't miss it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X