ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு?
பிராங்பர்ட் : எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன.
ஒபெக் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவில் 20 லட்சம் பேரல்களை குறைப்பது என ஒபெக் நாடுகள் முடிவெடுத்துள்ளன.
இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் தேவை குறைந்தது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 வாரங்களாக சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன.

விலையில் மாற்றமில்லை
சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் சராசரி விலை செப்டம்பர் மாதத்தில் பேரல் 90.71 டாலராகச் சரிந்தது. எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பிலிருந்து மீளவில்லை என்பதால்தான் விலைக் குறைப்பு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒபெக் கூட்டம்
இந்நிலையில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (ஒபெக்) கூட்டம் நேற்று வியன்னாவில் நடைபெற்றுள்ளது. ஒபெக் நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேவை மந்தமாக இருப்பது மற்றும் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஒரு முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

20 லட்சம் பீப்பாய் உற்பத்தி குறைப்பு
அதன்படி, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன. உலகப் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை கண்ணோட்டங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயரும்
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 138 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், ஒபெக் நாடுகளின் இந்த முடிவால் நவம்பரில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் - டீசல் விலை
இன்றைய நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 138வது நாளாக இன்றும் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றித் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications