For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி “பசி”யும் பறந்து போகும் – பசியைத் தடுக்க புதிய மாத்திரை

Google Oneindia Tamil News

லண்டன்: "பசி" இந்த இரண்டெழுத்து வார்த்தைதான், மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப் படிக்கின்றது.

அதுமட்டும் இல்லை என்றால் உலகில் மனிதர்களுக்கு வேதனைகளே இல்லை எனலாம்.

மனிதன் உழைப்பது வயிற்று பசியை ஆற்றுவதற்குத்தான். ஆனால், அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.

பசியைப் போக்கும் மாத்திரை:

அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.அந்த மாத்திரையில் உள்ள "அசிட்டேட்" என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள நார்ச்சத்து செரிக்காமல் தடுக்கிறது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் மீதான நாட்டம் குறைகிறது.

உணவு செரிமானம்:

செரிமானமாக்கும் நார்த்திசுக்கள் பல்வேறு தாவரங்களிலும், காய்கறிகளிலும் காணப்படுகின்றது.ஆனால், உணவைப் பொறுத்த வரையில் இதன் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.

வெளியேறும் அசிட்டேட்:

அப்படி உணவுப் பொருள் செரிக்கும்போது பெருமளவிலான அசிட்டேட் கழிவாக வெளியாகின்றது.ஆனால், இந்த மாத்திரையானது அசிட்டேட் கழிவாக மாறுவதை தடுத்து விடுகின்றது.

மாத்திரையின் உபயம்:

அதனால்தான் பசிக்கும் தன்மை குறைக்கின்றது.ஏனெனில்,இந்த மாத்திரையே அசிட்டேட் சத்துகளைக் கொண்டுள்ளது.

நார்ச்சத்து உணவுகள்:

"கற்காலத்தில் 100 கிராம் அளவிலான நார்ச்சத்து பொருட்களை மக்கள் உண்டனர்.ஆனால், தற்போது பெருகி வரும் துரித உணவுகளால் இதன் அளவு குறைந்து போய்விட்டது.இதனால் மனிதர்களின் உடலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளைக்கு கட்டளை:

இந்த மாத்திரையின் தாக்கத்தினால் ரத்தம், பெருங்குடல் மற்றும் மூளைக்கு உணவு பொருட்கள் சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The world's first pill to make you stop eating is set to become a reality. In a study led by Imperial College London and the Medical Research Council (MRC), an international team of researchers identified an anti-appetite molecule called acetate that is naturally released when we digest fiber in the gut. Once released, the acetate is transported to the brain where it produces a signal to tell us to stop eating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X