For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தாவணிக் கனவுகள்" பாக்யராஜும், புளூட்டோவும்...!

Google Oneindia Tamil News

புளோரிடா: என்னமோ இருக்கு என்று மட்டும் நம்மிடம் இத்தனை காலமாக டபாய்த்துக் கொண்டிருந்த புளுட்டோவை இனிமேல் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து ஆராயும் நேரம் வந்து விட்டது. நியூ ஹாரிஸான்ஸ் அந்த புதிய நம்பிக்கையை நமக்குக் கொடுத்துள்ளது.

கிட்டத்தட்ட 10 வருட கால பயணத்தை முடித்து புளுட்டோவைக் கடந்துள்ளது நியூஹாரிஸான்ஸ் விண்கலம். அது எடுத்து அனுப்பி வைக்கும் படங்களுக்காக விஞ்ஞான உலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித குலமும் காத்துக் கிடக்கிறது.

குள்ள கிரகமாக அறியப்படும் புளூட்டோதான் சூரியக் குடும்பத்திலேயே கடைசிக் கிரகமாகும். இதுவரை அறியப்படாத கிரகம் என்ற பெயருடன் இருந்து வந்தது புளுட்டோ. தற்போது இதையும் தொட்டுப் பார்த்து விட்டான் மனிதன்.

ஐந்து நிலவுகளுடன் புளூட்டோ

ஐந்து நிலவுகளுடன் புளூட்டோ

தாவணிக் கனவுகள் படத்தில் பாக்யராஜுக்கு ஐந்து தங்கைகள் இருப்பது போல, ஐந்து நிலவுகளுடன் உள்ளது புளூட்டோ கிரகம். அதில் பெரியது சரோன் என்ற நிலவு. அடுத்து ஸ்டிக்ஸ், நிக்ஸ், ஹைட்ரா மற்றும் கெர்பரோஸ் என நான்கு குட்டி நிலவுகள் உள்ளன.

தெளிவான படங்கள்

தெளிவான படங்கள்

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது புளுட்டோவையும், சரோனையும் தெளிவாகப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. புளுட்டோ கிரகம் தொடர்பான நியூ ஹாரிஸான்ஸ் புகைப்படத்திலிருந்து அந்த கிரகத்தில் நிறைய பள்ளத்தாக்குகள், மலைகள், உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரகாசமும், இருட்டும்

பிரகாசமும், இருட்டும்

வித்தியாசமான தரைப்பரப்புடன் கூடிய புளுட்டோவில், வட பகுதி பிரகாசமாகவும், ஈகுவடார் பகுதி கரும் படலமாகவும் காட்சி தருகிறது. சரோனில் உள்ள தரைப் பரப்பை விட புளுட்டோவின் தரைப்பரப்பு மென்மையாக காணப்படுகிறது.

மெல்லிய நைட்ரஜன் மண்டலம்

மெல்லிய நைட்ரஜன் மண்டலம்

புளூட்டோவில் மெல்லிய நைட்ரஜன் வாயு மண்டலம் சுற்றியிருப்பதை நியூ ஹாரிஸான்ஸ் சென்சார் கருவி கண்டுபிடித்துள்ளது.

பாறைகள் குறைவு

பாறைகள் குறைவு

புளூட்டோவில் பாறைகள் அதிகமாகவும், ஐஸ் கட்டிகள் குறைவாகவும் இருக்கலாம் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் அது உல்டாவாக இருக்கலாம் என்று தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பாறைகள் குறைவாகவும், ஐஸ் அதிகமாகவும் இருக்கிறதாம்.

16 மாதமாகும்

16 மாதமாகும்

தற்போது நியூஹாரிஸான்ஸ் எடுத்துள்ள புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை முழுமையாக நாம் பெற கிட்டத்தட்ட 16 மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. காரணம், பூமிக்கும், நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்துக்கும் இடையிலான மிகப் பெரிய தூரமாகும்.

கியூப்பர் பெல்ட் எனப்படும் கடைக் கோடி

கியூப்பர் பெல்ட் எனப்படும் கடைக் கோடி

கியூப்பர் பெல்ட் எனப்படும் சூரியக் குடும்பத்தின் கடைக் கோடியில் புளூட்டோ உள்ளது. விண்வெளியின் 3வது மண்டலமாக இதை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். முதல் மண்டலத்தில் பாறையும், மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய் ஆகிய கிரகங்களும் உள்ளன. 2வது மண்டலத்தில் வாயுக்கள், ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்கள் உள்ளன 3வது மண்டலத்தில் புளூட்டோ உள்ளது. அது போக கிட்டத்தட்ட 1 லட்சம் குட்டி குட்டி உலகங்களும் இங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஏராளமான வால் நட்சத்திரங்களும் இங்கு உள்ளன.

2030 வரை

2030 வரை

கியூப்பர் பெல்ட் பகுதியில் தனது பயணத்தை நியூ ஹாரிஸான்ஸ் தொடரவுள்ளது. புளுட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்ட நியக்ளியார் ஜெனரேட்டர் மூலம் விண்கலம் இயங்குகிறது. இந்த ஜெனரேட்டரானது 2030 வரை இயங்கும். அந்த சமயத்தில் பூமியிலிரு்து 100 மடங்கு தூரம் போய் விட்டிருக்கும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம்.

English summary
New Horizons is aimed to probe the Pluto and its 5 moons including the bigger Charon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X