For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி.. அத்துடன் செஞ்ச விஷயம்தான் ஹைலைட்டே

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி-வீடியோ

    ஹூஸ்டன்: அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். நேற்று பிரதமர் மோடியுடன் இருந்த காரணத்தால் பிறந்த நாளில் ஜான் கார்னின் தனது மனைவியுடன் இருக்க முடியாமல் போனது. இதற்காக பிரதமர் மோடி ஜான் கார்னின் மனைவியின் நகைக்சுவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    டெக்ஸாஸ் மாகாணத்திற்கான அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் பிரதமர் மோடி சிரித்துக்கொண்டே நகைக்சுவையாக மன்னிப்பு கோரும் வீடியோவை பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    PM Modi seen apologized to US senator John Cornyns wife on her birthday

    பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹவுடி மோடி (மோடி நலமா) என்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடியை டெக்ஸாஸ் மாகாணத்தின் அமெரிக்க செனட்டர் ஜான் கார்னி வரவேற்று பேசினார்..

    இதேநேரம் ஜான் கார்னியின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். பிரதமர் மோடியுடன் இருந்ததால் ஜான் கார்னியால் அவரது மனைவியுடன் நேற்று இருக்க முடியவில்லை. ஜான் கார்னி தம்பதிக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் அலுவலகம் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஜான் கார்னியின் மனைவிக்கு வீடியோ மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி கூறுகையில், உங்கள் பிறந்த நாளில் உங்களின் சிறந்த வாழ்க்கை துணை இப்போது என்னுடன் உள்ளார். இதனால் உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டு இருக்கும் அதற்காகமன்னிப்பு கோருகிறேன் என நகைச்சுவையாக கூறினார்.

    மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வளமான, அமைதியான எதிர்காலம் தங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன் என்றும் வீடியோவில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். செனட்டர் ஜான் கார்னியும் மோடியுடன் இருந்தார்.

    தன்னுடன் இருந்ததால் மனைவியின் பிறந்த நாளை அமெரிக்க செனட்டர் ஜான் கார்னியால் கொண்டாட முடியாமல் போனதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதுடன் மட்டுமல்லாமல் அதை பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

    English summary
    PM Modi not only apologised to Cornyn's wife but also shared the video from his twitter handle
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X