தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹுவாலியன்: தைவானில் செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தைவானில் உள்ள கடற்கரை நகரமான ஹுவாலியன் அருகே நேற்று இரவு 11.50 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.

Quake hit Taiwan: 2 dead, 200 injured

இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் நகரில் உள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர், 214 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஹுவாலியன் நகரில் உள்ள மார்ஷல் ஹோட்டலின் தரை தளம் இடிந்தது. ஹோட்டலில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மருத்துவமனை உள்பட 5 கட்டிடங்களும் மோசமாக சேதமடைந்துள்ளன.

Quake hit Taiwan: 2 dead, 200 injured

கடந்த 10 ஆண்டுகளில் ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Quake measuring 6.4 on the Richter scale hit the coastal city of Hualien in Taiwan on tuesday night. 2 people got killed and 214 got injured after some buildings collapsed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற