For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானத்தின் “கருப்பு பெட்டி” எங்கே.. தேடல் தீவிரம்

Google Oneindia Tamil News

கான்பெரா, ஆஸ்திரேலியா: மலேசிய விமானம் கடலில் மூழ்கிவிட்ட போதிலும் அதற்கான காரணங்கள் இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

அந்த முடிச்சை அவிழ்ப்பதற்கான சாவிகளைத் தேடி இன்னும் பல நாடுகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதில் முக்கியமாக கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் தேடல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

17 நாள் பிரார்த்தனை வீண்

17 நாள் பிரார்த்தனை வீண்

17 நாட்கள் அனைவரின் வேண்டுதல்களையும் உடைத்து சுக்கு நூறாக்கி விட்டு தானும் உடைந்து நொறுங்கிப் போனது மலேசிய விமானம்.இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ள எம்ஹெச்370வின் "கருப்பு பெட்டி"யை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டி

கருப்புப் பெட்டி

பெயர்தான் இதற்குக் கருப்புப் பெட்டி. ஆனால், கருப்பு பெட்டி என்பது விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் அடங்கிய மஞ்சள் நிற பெட்டியாகும்.

30 நாள் வரை செய்தி கிடைக்கும்

30 நாள் வரை செய்தி கிடைக்கும்

விமானம் நொறுங்கினாலும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு செய்தி அனுப்ப இயலும்.ஆனால், வல்லுனர்கள் இந்த மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி தொடர்ந்து 15 நாட்களுக்கு செயல்பட்டு இருக்கிறது.அதனால் அதன் திறன் குறைந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

கிடைக்காவிட்டால் கஷ்டம்

கிடைக்காவிட்டால் கஷ்டம்

கருப்பு பெட்டி மட்டும் கிடைக்காவிட்டால் கண்டிப்பாக மலேசிய விமானத்தின் அழிவுக்கான காரணங்களை கண்டறிய இயலாது என்பதே உண்மை.

இடத்தைத் தேடி.. கருப்புப் பெட்டியையும் தேடி

இடத்தைத் தேடி.. கருப்புப் பெட்டியையும் தேடி

மலேசிய விமானம் விழுந்த இடம் இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டியை தேடி வருகின்றனர்.

ஆயுள் முடிவதற்குள் கிடைக்க வேண்டும்

ஆயுள் முடிவதற்குள் கிடைக்க வேண்டும்

"கருப்பு பெட்டி கிடைத்தால்தான் நல்லது" என்று கூறியுள்ளார் ஜான் கோக்லியா என்ற அமெரிக்காவின் முன்னாள் காவல்துறை அதிகாரி. "கருப்பு பெட்டியின் ஆயுள் முடிவதற்கு முன் அதனை கண்டுபிடிக்க வேண்டும்.கிட்டத்தட்ட ரேஸில் ஓடுவது போல் இதற்கான தேடுதல் நடக்க வேண்டும்"என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கக் கடற்படையினர் தேடுகின்றனர்

அமெரிக்கக் கடற்படையினர் தேடுகின்றனர்

கருப்பு பெட்டியின் சிக்னலை பெறும் வகையில் அமெரிக்க கடற்படையினர் அதி நவீன கேட்கும் கருவியை கொண்டு தேடி வருகின்றனர்.

ஒரு மைலுக்கு முன்பாகவே சிக்னல் கிடைக்கும்

ஒரு மைலுக்கு முன்பாகவே சிக்னல் கிடைக்கும்

முன்பாக, அமெரிக்க கடற்படையின் தேடுதல் கருவி இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. 30 அடி நீளமுள்ள,உருளை வடிவம் உள்ள இந்த கருவி நீருக்கு அடியில் செலுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் கருப்பு பெட்டி வெளிப்படுத்தும் அந்த ஒலிவடிவிலான சிக்னலை 1 மைல் முன்பாக கண்டறிய இயலும்.ஆனால்,அதற்கு கருப்பு பெட்டி சிதைவடையாமல் இருக்க வேண்டும்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த கருப்புப் பெட்டி

2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த கருப்புப் பெட்டி

2009இல் நடைபெற்ற பிரான்சு விமானத்தின் மறைவில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது.இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Time is running out to find the crucial keys that could solve the mystery of how and why Malaysia Airlines Flight 370 went down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X