Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மாஸ்கோவில் திடீர் கைது! என்ன காரணம் தெரியுமா? அமெரிக்காவை சீண்டிய ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போருக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவை நேரடியாகச் சீண்டும் வகையில் ரஷ்யா இப்போது நடவடிக்கை

உக்ரைன் போர் உலக நாடுகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. கடந்த பிப். தொடக்கத்திலேயே போரை ஆரம்பித்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

அதேபோல போர் தொடங்கிய உடன் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது அறிவித்துள்ளது. வரும் காலத்தில் இந்தப் பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

 கைது

கைது

இந்த பொருளாதாரத் தடை அறிவிப்புகள் ரஷ்யப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்த போதிலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடவில்லை. இந்தச் சூழலில் அமெரிக்காவைச் சீண்டும் வகையில், அந்நாட்டின் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை ரஷ்யா கைது செய்துள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரிட்னி கிரைனரை கஞ்சா வேப் வைத்திருந்ததாகக் கூறி ரஷ்யா போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

 ரஷ்ய சுங்கத்துறை

ரஷ்ய சுங்கத்துறை


உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவாகி உள்ள நிலையில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனையை ரஷ்யா கைது செய்துள்ளதாக ரஷ்யச் சுங்கத்துறை அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. பிரிட்னி கிரைனர் எவ்வளவு காலம் தடுப்பு சிறையில் உள்ளார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், ரஷ்யச் சுங்கத்துறை அறிக்கைப்படி பிரிட்டனி கிரைனரை பிப். மாதத்திலேயே ரஷ்யா கைது செய்துள்ளது தெரிகிறது. இருப்பினும் பிப். மாதம் எப்போது கைது செய்யப்பட்டார் எனத் தெளிவான தகவல் இல்லை.

 என்ன காரணம்

என்ன காரணம்

இது தொடர்பாக ரஷ்யச் சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், "நியூயார்க்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த அமெரிக்கக் குடிமகன் ஒருவரது உடைமையை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட வாசனையுடன் கூடிய வேப் மற்றும் திரவம் இருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த திரவம் கஞ்சா எண்ணெய் (ஹாஷிஷ் எண்ணெய்) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    S 400 missile system | US என்ன தடை போட்டாலும்! India-வுடன் நிற்கும் Russia | Oneindia Tamil
    வீடியோ

    வீடியோ

    அதேநேரம் ரஷ்யா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. மாறாக அமெரிக்கா சார்பில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற கூடைப்பந்து வீராங்கனை என்று மட்டும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யச் சுங்கத்துறை வெளியிட்ட வீடியோவில் பிரிட்னி கிரைனர் ஏர்போட்டில் நின்று கொண்டு இருப்பதே தெளிவாகத் தெரிகிறது. போருக்கு மத்தியில் அமெரிக்கா வீராங்கனை ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     அமெரிக்கா விளக்கம்

    அமெரிக்கா விளக்கம்

    இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கக் கூடைப்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பிரிட்னி கிரைனர் மற்றும் அவரது சட்ட வல்லுநருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவரை பத்திரமாக அமெரிக்கா அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 31 வயதான கிரைனர், ரஷ்யாவில் இருக்கும் கூடைப்பந்து கிளப் அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கிளப் அணிகளுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+