For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு ஆச்சர்யப்பட வைத்த ரஷ்யா.. அதிர வைக்கும் இந்தியா.. மிகப்பெரிய திருப்பம்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: மருந்து கண்டுபிடிப்பில் உலக நாடுகள் ரஷ்யாவை சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையில், அங்கு கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் மிக வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தொற்று பாதி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மாறி உள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கி கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2,53,77,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850,149 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,700,949 பேர் மீண்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 6,826,606 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

 'ஸ்புட்னிக் 5' கொரோனா தடுப்பூசி உற்பத்தி.. இந்திய ஒத்துழைப்பை கேட்கும் ரஷ்யா 'ஸ்புட்னிக் 5' கொரோனா தடுப்பூசி உற்பத்தி.. இந்திய ஒத்துழைப்பை கேட்கும் ரஷ்யா

அமெரிக்கா 2வதுஇடம்

அமெரிக்கா 2வதுஇடம்

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது அதிகபட்சமாக பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 33974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 15346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா 3வது இடம்

இந்தியா 3வது இடம்

உலகிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 6,173,229 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலில் 3,862,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பை சந்தித்த 3வது நாடான இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,619,169 ஆக உயர்ந்துள்ளது.

 ஆச்சர்யப்படுத்தும் ரஷ்யா

ஆச்சர்யப்படுத்தும் ரஷ்யா

இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக சந்தித்து வந்த ரஷ்யாவில் தொற்று பாதிப்பு அண்மைக்காலமாக வேகமாக குறைந்து வருகிறது. ரஷ்யாவில் தற்போது 990326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 17093 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பை தடுப்பதிலும், பாதிப்பை குறைப்பதிலும் ரஷ்யா வல்லமையுடன் திகழ்கிறது. ரஷ்யாவின் தடுப்பூசியை உலக நாடுகள் சந்தேகதித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறும் 68 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பும் குறையவில்லை. உயிரிழப்பும் குறையவில்லை. ரஷ்யா என்று இல்லை.. ஐரோப்பா முழுவதுமே தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Recommended Video

    நட்பு நாடுகளுக்கு Free Vaccine.. China -ன் திட்டம் என்ன?
    தொற்று கிடுகிடு உயர்வு

    தொற்று கிடுகிடு உயர்வு

    ஆனால் இந்தியாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.கொரோனா தொற்றால் உலகிலேயே ஒரு நாளில் அதிக பாதிப்பு மற்றும் அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா மாறி உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,619,169 ஆக உள்ளது. வெறும் ஏழு நாளில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 64,617 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.

    English summary
    The coronavirus COVID-19 is affecting 213 countries and territories around the world. russia reduced covid cases now. but india record very high cases in last one week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X