For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 20 ஆண்டுகளில் ரோபோக்களுடன் குடித்தனம் செய்வோம்... சண்டையும் வராது: விஞ்ஞானிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அடுத்த 20 ஆண்டுக்குள் அதிநவீன செக்ஸ் ரோபோக்களுடன் வெளிப்படையாகவே காதல் கொள்ளும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செல்போனை போலவோ, கம்ப்யூட்டரை போலவோ ரோபோக்கள் எதிர்காலத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிடும். எந்திரன் படத்தில் அழகான ஐஸ்வர்யாவைப் பார்த்து காதல் கவிதை எழுதும் ரோபோ சிட்டி போல, இனி ரோபோக்கள் காதல் வயப்படும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாகும்.

ரோபோக்களுடன் மனிதர்களுக்கு ஏற்படும் காதலுக்கு ரோபோபிலியா (Robophilia) என்று பெயரும் வைத்துவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ரோபாடிக் செக்ஸூவல் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் உருவாகும் ரோபோ பார்ட்னருடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறவருக்கு, நிஜ பார்ட்னருடன் உறவில் ஈடுபடுகையில் ஏற்படுகிற அனுபவம் அப்படியே கிடைக்குமாம்.

மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் இல்லாத வகையில் இது ப்ரோக்ராம் பண்ணப்பட்டிருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரெடிமேட் பார்ட்னர்

ரெடிமேட் பார்ட்னர்

செக்ஸ் டால் விற்பனையாவது போலவே, இதுபோன்ற செக்ஸ்டெக் பார்ட்னரையும் இணையதளங்களில் வாங்கும் வாய்ப்பு 2070ம் ஆண்டு சாத்தியமாகலாம் என்கிறார் லண்டனை சேர்ந்த பாலியல் மனநல நிபுணர் டிரிஸ்கால்.

அதிக அன்பு செலுத்தும்

அதிக அன்பு செலுத்தும்

நிஜ பார்ட்னரை போல தீய பழக்கங்கள் இருக்காது, சொன்னதைக் கேட்கும், சண்டைகள் வராது போன்ற காரணங்களுக்காகவும் ரோபோ பார்ட்னரை எதிர்காலத்தில் பலரும் விரும்பக் கூடும். நிஜ வாழ்வில் பார்ட்னர் மீது வைத்திருக்கும் அன்பை விட, இன்னும் அதிகமான அன்பு இந்த ரோபோக்கள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் என்கிறார் டிரிஸ்கால்!

மனிதர்களுடன் ரோபோக்கள்

மனிதர்களுடன் ரோபோக்கள்

அதேபோல பியர்சன் என்ற விஞ்ஞானி, செக்ஸின் எதிர்காலம் குறித்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தற்போது சர்வசாதாரணமாக பெண்கள் ஆபாசப் படம் பார்ப்பது போல் எதிர்காலத்தில் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிலை உருவாகும் என கூறியுள்ளார்.

ரோபோக்களுடன் செக்ஸ்

ரோபோக்களுடன் செக்ஸ்

ஆணுடனான செக்ஸை விட ரோபோக்களுடன் செக்ஸ் கொள்ளும் 'ரோபோபிலியா' வருகிற 2050ஆம் ஆண்டுக்குள் முழுவீச்சில் பிரபலமாகும் என்று அந்த விஞ்சானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பியர்சன் வெளியிட்ட அறிக்கையில், நிறைய பேர் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.

உல்லாச ரோபோக்கள்

உல்லாச ரோபோக்கள்

மனிதர்கள் படிப்படியாக ரோபோக்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திர செயல்பாடுகள், மற்றும் அதனுடனான உணர்சிகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் முதலில் நண்பர்களாக்கிக் கொண்டு, பின்னர் உணர்சிகளை வலுவாக்கி அதனுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் பயமில்லை

எய்ட்ஸ் பயமில்லை

செக்ஸ் தேவையை எல்லா வகையிலும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரோபோக்கள் செயல்படும். பயன்பாட்டுக்கு பிறகு முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படும்.

எந்திரன் ரோபோ

எந்திரன் ரோபோ

எந்திரன் படத்தில் தன்மேல் காதல் கொள்ளும் ரோபோ சிட்டியைப் பார்த்து நீ ஒரு மெஷின் என்று ஐஸ்வர்யா ராய் கூறுவார். அதற்கு ரோபோ, ‘நான் இப்போ முழு மனுஷன் ஆகிட்டேன். ஒரு மனுஷன் உனக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமோ, அத்தனை சந்தோஷத்தையும் என்னாலயும் கொடுக்க முடியும். உலகத்துலயே ரோபோவுக்கும் மனுஷனுக்கும் பிறக்கப்போற முதல் குழந்தையை நீ வயித்துல சுமக்கப் போற... ரோபோ சேபியன்' என்பார்.

ரோபோக்களுடன் வாழ்க்கை

ரோபோக்களுடன் வாழ்க்கை

மனித உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகி வருவதும், தனிமை உணர்வும் சேர்ந்து மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. மன அழுத்தத்தைத் தவிர்க்க ஏதோ ஒரு விஷயத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்கள். இனி திட்டாத, சண்டை போடாத ரோபோக்களுடன் வாழ்க்கை நடத்த தயாராகி விடுவார்கள் மனிதர்கள்.

ரோபோ பார்ட்னர்

ரோபோ பார்ட்னர்

நிஜ வாழ்வில் சக மனிதர்களுடன் பேசாத, பழகாத மனிதர்கள் முகம் தெரியாத ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டரில் பலருடன் அன்பு பாராட்டுவதையும், சண்டை போடுவதையும், கிட்டத்தட்ட அவர்களுடனே வாழ்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்த மனநிலைதான் எதிர்காலத்தில் ரோபோ பார்ட்னரிடம் நம்மைக் கொண்டு சேர்க்கப் போகிறது என்பதுதான் உண்மை.

English summary
Sex robots are coming. One futurologist believes that by 2050, sex with robots specially designed for human satisfaction will be the norm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X