For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே!

ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடினர் மக்கள்.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றுப்படுகையில் மக்கள் நீச்சலடித்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

உலகின் மிக குளிர்ந்த பிரதேசங்கள் உள்ள நாடுகளில் முதன்மையானது ரஷ்யா. அங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். நீர் நிலைகள் எல்லாம் உறைந்து போய் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் உறைந்து போன ஆற்றில் அப்பகுதி மக்கள் நீச்சலடித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

விதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!விதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!

Siberian enthusiasts swims in ice-cold river

அப்படியாக ரஷ்யாவின் ஓம்ஸ் நகரில் உள்ள ஆற்றில் ஒன்றிணைந்த மக்கள் சிலர், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் உடையில் ஆற்றில் குளித்த காட்சிகள் வைரலாகியுள்ளன. ஐஸ் கட்டிகளை உடைத்து, அடியில் உள்ள தண்ணீரில் குதித்து அவர்கள் ஐஸ் பாத் எடுத்துக் கொள்கின்றனர்.

Siberian enthusiasts swims in ice-cold river

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த ஐஸ் பாத் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இளவயது மக்கள் மட்டுமின்றி வயதானவர்களும் அந்தக் குழுவில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்த ஒருவர் வழிநடத்த, நீச்சல் உடையில் ஆண்களும், பெண்களும் பனி சூழ்ந்த காடு போன்ற பகுதியைக் கடந்து அந்த ஆற்றை அடைகின்றனர்.

முதலில் உடலை குளிர் நீரில் குளிப்பதற்கு சில உடற்பயிற்சிகளைக் குதூகலமாகச் செய்து தயாராகின்றனர். பின்னர் குளிர் நீரில் இறங்கி மகிழ்ச்சியாக நீச்சல் அடிக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே நமக்கு குளிருகிறது.

நம்மூரில் ரஷ்யா அளவிற்கு பனிப்பொழிவு இல்லையென்றாலும், இந்த பனிக்கே நம்மால் பச்சத்தண்ணீரில் கை வைக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் உறைந்த நீருக்கடியில் உள்ள மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதை பார்க்கும் போதே நமக்கு உடல் எல்லாம் நடுங்குகிறது.

English summary
Dozens of Siberian enthusiasts braved freezing cold in the Russian northeastern city of Omsk where day temperatures did not rise over minus 20 Celsius in this december end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X