ஒரே தேதியில் பிறப்பு, இறப்பு.. ஒரே வயது.. ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?- வீடியோ

  லண்டன்: ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பேரும் இல்லையென்றால் இன்றைய அறிவியலை நாம் நினைத்து கூட பார்த்து இருக்க முடியாது.

  ஐன்ஸ்டினை பள்ளியில் முட்டாள் என்றுதான் அழைப்பார்கள். அவரைப்போலவே இருந்ததால் ஹாக்கிங்கை ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள்.

  அந்த அளவிற்கு இவர்களுக்குள் பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இப்போது மரணத்திலும் கூட சில ஒற்றுமைகள் இருக்கிறது.

  பிறந்தது

  பிறந்தது

  ஐன்ஸ்டின் பிறந்த தேதியில்தான் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார். ஐன்ஸ்டின் 1879 மார்ச் 14ல் பிறந்தார். தற்போது 2018 மார்ச் 14ல் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார்.

  வயது

  வயது

  இருவருக்கும் மூளை ரீதியான பிரச்சனை இருந்தது. ஹாக்கிங் மூளை நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டார். ஐன்ஸ்டின் ஆட்டிசம் காரணமாக பாதிக்கப்பட்டார். இருவரும் இறந்தது 76 வயதில்தான்.

  மனைவி

  மனைவி

  இருவருக்கும் இரண்டு மனைவிகள் இருந்துள்ளார்கள். ஐன்ஸ்டின் தனது முதல் மனைவி மிலேவா மாரிக்கை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எல்சா லொவெந்தாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் ஹாக்கிங் தனது மனைவி ஜேனை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எலைன் மாசனை திருமணம் செய்து கொண்டார்.

  அவர்தான் இவர்

  அவர்தான் இவர்

  இருவரது ஐக்யூவும் 160க்கும் அதிகம். ஹாக்கிங் வாழ்ந்த காலத்தில் அவரை பல பேர் ஐன்ஸ்டினின் அவதாரம் என்று கூறி வந்தார்கள். ஆனால் பல முறை தானும் அவரும் வேறு வேறு என்று ஹாக்கிங் நிரூபித்து இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Stephen Hawking passes away at an age of 76 in London. A Lot of similarities are there between Albert Einstein and Stephen Hawking.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற