For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சர்ப்ரைஸ்" தந்த தாலிபன்.. தோட்டத்தில் புதைத்ததை தோண்டி எடுத்து.. 21 வருஷத்துக்கு பிறகு.. ஒரே குஷி

தாலிபன் நிறுவனர் முல்லா உமரின் காரை 21 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுத்துள்ளனர்

Google Oneindia Tamil News

காந்தஹார்: ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 21 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது.

உலகமெங்கும் கவனிக்கப்பட்டு வருபவர்கள் தாலிபன்கள்.. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த தாலிபன் அமைப்பை தோற்றுவித்தவர்தான் முல்லா உமர்.. இவர்தான் இந்த அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார்..

ஜே.என்.யு. மாணவர் உமர் காலிதுக்கு ஜாமீன் மறுப்பு... டெல்லி வன்முறை வழக்கில் தொடரும் சிறைவாசம் ஜே.என்.யு. மாணவர் உமர் காலிதுக்கு ஜாமீன் மறுப்பு... டெல்லி வன்முறை வழக்கில் தொடரும் சிறைவாசம்

தாலிபன்கள்

தாலிபன்கள்

இவரின் தலைமையில்தான் 1996ல் முதல்முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது... இதுக்கு பிறகு, 2001ல் அமெரிக்க ஆதரவு உள்ளூர் படைகளால் தலிபான்கள் விரட்டப்பட்டதால், முல்லா முகமது உமர் தலைமறைவாகிவிட்டாராம்.. அப்படியே 2013-ல் உயிரிழந்தும் விட்டார் என்கிறார்கள்.. முன்னதாக, உள்நாட்டு போரில் வென்ற தலிபான்கள், 1996ல் ஆட்சியை பிடித்தனர்.. அதற்கு பிறகு, அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் - குவைதா பயங்கரவாதிகள், 2001ல் தகர்த்தனர்.

 ஆப்கன் பெண்கள்

ஆப்கன் பெண்கள்

இதற்கு பிறகு, ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் அரசை நீக்கிவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை ஆட்சியில் உட்கார வைத்தது.. இந்த 20 வருட கால ஆட்சியில் பெண்களும், அங்கு சுதந்திரம் பெற்றனர்.. கல்வி கற்றனர்.. ஆப்கனும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டது.. எனினும், ஆப்கன்கள் இந்த நிலைமையை நீடிக்கவிடவில்லை.. 20 வருடங்களுக்கு பிறகு, மறுபடியும் ஆட்சியை பிடித்துவிட்டனர்.. மறுபடியும் பெண்களை கூண்டுக்குள் அடைத்துவைத்து, அதிகாரங்களையும், கெடுபிடிகளையும் திணித்து வருகின்றனர்.

 முல்லா உமர்

முல்லா உமர்

ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்து, ஆப்கன் பெண்களை கலங்கடித்து வருகின்றனர்.. இந்நிலையில், திடீரென ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளனர் ஆப்கன்கள்.. தங்களின் தலிபான் நிறுவனரான முல்லா உமர், காரை தோண்டி எடுத்துள்ளனர்.. அதாவது, 2001-ல், அமெரிக்கா போர் தொடுத்தபோது, வெள்ளை நிற டொயோட்டா குவாலிஸ் காரில், முல்லா உமர் தப்பிக்க முயற்சித்துள்ளார்.. ஆனால், அமெரிக்க படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவரால் காரில் தப்பிக்க முடியவில்லை.

 தோட்டத்தில் கார்

தோட்டத்தில் கார்

அதனால், முல்லா உமரின் காரை, தலிபான் படையை சேர்ந்த அப்துல் ஜபார் ஒமாரி என்பவர், ஸாபூல் மாகாணத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்தில், பூமிக்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்தார்.. அந்த காரைதான் தற்போது, தோண்டி வெளியே எடுத்துள்ளனர்.. அந்த கார் இப்போதும் பார்ப்பதற்கு அப்படியே இருப்பதாகவும், எந்தவித டேமேஜூம் அதில் காணப்படவில்லை என்கிறார்கள்..

Recommended Video

    மோசமான நிலையில் Afghanistan இருக்கு.. எச்சரிக்கும் ஐநா
     குஷியில் தாலிபன்கள்

    குஷியில் தாலிபன்கள்

    இப்போதும் இந்த கார் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதாம்.. ஆனால், காரின் முன்பக்க கண்ணாடி மட்டுமே லேசாக உடைந்துள்ளதாக சொல்கிறார்கள்..அதனால், விரைவில், ஆப்கனின் தேசிய அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு, முல்லா உமர் காரை வைக்கப் போவதாகவும் தலிபான்கள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள். குழிக்குள் புதைக்கப்பட்டிருந்த முல்லா உமரின் கார் எடுக்கப்படும் போட்டோக்கள், இப்போது, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

    English summary
    surprise news given by taliban and excavate founder mullah omar car photo surfaces தாலிபன் நிறுவனர் முல்லா உமரின் காரை 21 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுத்துள்ளனர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X